கோயில் மாடு ஓட்டம்

கோயில் மாடு ஓட்டம் என்பது ராஜகம்பளத்து நாயக்கர் சமூகத்தினரின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று. இது அவர்கள் சமூகத்தினரால் "சலகெருது” என்று அழைக்கப்படுகிறது.

மரபு விழா தொகு

திண்டுக்கல் மாவட்டம் கருங்கல் ஊராட்சி சுக்காம்பட்டியில் மாரியம்மன், முத்தாலம்மன் கோயில் உள்ளது. இங்கு திண்டுக்கல், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர் சமூகத்தினர் மரபு விழாக்களை நடத்துவது வழக்கம். இந்த மூன்று நாள் விழாக்களில் ஒயிலாட்டம், “சலகெருது” எனப்படும் கோயில் மாடு ஓட்டுவது போன்றவை சிறப்புடையது. கோயில் மாடு ஓட்டத்தில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான காளைகள் பங்கேற்றன. கோயில் முன், அவற்றிக்கு பூசை செய்து, 2 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஊரின் எல்லை பகுதிக்கு காளைகள் அனைத்தையும் கரகோஷத்துடன் அழைத்து செல்கின்றனர். அங்கிருந்து காளைகளை கோயிலை நோக்கி விரட்டி வருகின்றனர். விழாவில் பங்கேற்ற ஆண்கள் அனைவரும் அவர்கள் கொண்டு வந்த காளைகளை அவர்களது சமுதாய மரபு வழக்கப்படி சட்டை அணியாமல் தடியுடன் கோயில் நோக்கி விரட்டி வருவர். முதலில் வரும் காளைக்கு பரிசு அளிக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயில்_மாடு_ஓட்டம்&oldid=829102" இலிருந்து மீள்விக்கப்பட்டது