கால் மீ பை யுவர் நேம்

கால் மீ பை யுவர் நேம் (உன் பெயரால் என்னை அழை, Call Me by Your Name) என்பது 2017 ஆண்டு வெளியான ஒரு திரைப்படமாகும். இப்படத்தை இத்தாலி இயக்குநர் லூகா குவாடனீனோ இயக்கியுள்ளார். ஆண்ட்ரே அக்சிமன் இதே பெயரில் 2007 இல் எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, ஜேம்ஸ் ஐவரியால் இது எழுதப்பட்டது. இப்படம் படம், 2017 ஆண்டுக்கான சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறது.

கால் மீ பை யுவர் நேம்
இயக்கம்லூகா குவாடனீனோ
தயாரிப்பு
  • பீட்டர் ஸ்பியர்ஸ்
  • லூகா குடகினினோ
  • எமிலி ஜியோர்ஸ்
  • ரோட்ரிகோ டீக்ஸீரா
  • மார்கோ மொராப்ட்டோ
  • ஜேம்ஸ் ஐவரி
  • ஹோவர்ட் ரோசன்மன்
மூலக்கதைCall Me by Your Name
படைத்தவர் André Aciman
திரைக்கதைஜேம்ஸ் ஐவரி
நடிப்பு
  • ஆர்மி ஹாமர்
  • தீமோதி சலாம்ட்
  • மைக்கேல் ஸ்டுல்பர்க்
  • அமிரா காசார்
  • எஸ்தர் கார்ல்ல்
  • விக்கியோரி டு பாய்ஸ்
ஒளிப்பதிவுசய்யூமு முக்தீப்ரோம்
படத்தொகுப்புவால்டர் ஃபேசானோ
கலையகம்
  • ஃபிரென்ஸி பிலிம் கம்பெனி
  • லா சினிஃபாகுரேர்
  • ஆர்டி அம்சங்கள்
  • எம்.ஒயு.ஆர்.ஏ. எண்டர்டெயின்மெண்ட்
  • வாட்டர்'ஸ் எண்ட் புரொடக்சன்ஸ்
விநியோகம்
வெளியீடு22 சனவரி 2017 (2017-01-22)(சன்டான்ஸ்)
24 நவம்பர் 2017 (United States)
18 சனவரி 2018 (Brazil)
25 சனவரி 2018 (Italy)
28 பெப்ரவரி 2018 (France)
ஓட்டம்132 நிமிடங்கள்[1]
நாடு
  • இத்தாலி
  • ஐக்கிய மாநிலங்கள்
  • பிரேசில்
  • பிரான்ஸ்
மொழி
  • ஆங்கிலம்
  • இத்தாலியன்
  • பிரெஞ்சு[2]
ஆக்கச்செலவு$3.5 மில்லியன்
மொத்த வருவாய்$38 மில்லியன்[3]

கதை தொகு

வடக்கு இத்தாலியில் உள்ள சிறு கிராமத்தில் 1980 களில் இக்கதை நடக்கிறது. ஏலியோ, இசையில் ஆர்வம் கொண்ட 17 வயது இளைஞன். கோடை விடுமுறையைக் கழிக்க ஏலியோவின் வீட்டுக்கு வருகிறான் 24 வயது ஆலிவர். இருவருக்கும் இடையில் தன்பால் ஈர்ப்பு ஏற்படுகிறது. இது இயல்பாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல் போன்றதே என்பதை, ஏலியோவுக்கும் ஆலிவருக்குமான ஈர்ப்பை ‘முதல் காதல்’ என்று ஏலியோவின் தந்தை சொல்கிறபோது உணர்த்துவதாக உள்ளது.

இருவருக்கும் இடையிலான பிணைப்பு வலுப்படுகிற ஒரு கட்டத்தில், “உன் பெயரால் என்னைக் கூப்பிடு, என் பெயர் சொல்லி உன்னை அழைக்கிறேன்” என்பான் ஆலிவர். இருவர் ஒருவராகிப் போகும் காதலின் இறுதிநிலைக்கு இருவரும் ஆட்படுகிறார்கள். ஆண் – பெண் காதலில் இருக்கிற அதீதமும் தேடலும் தன்பால் ஈர்ப்பிலும் உண்டு எனச் சொல்லியிருப்பதன் மூலம் தன்பால் ஈர்ப்பு இயற்கைக்கு எதிரானது என்ற பிற்போக்கு சிந்தனையை இயக்குநர் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Call Me by Your Name (2017)". British Board of Film Classification. Archived from the original on 7 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2017.
  2. "Berlin Film Festival 2017 Program by Memento Films" (PDF). Memento Films International. Archived from the original (PDF) on 8 December 2017. பார்க்கப்பட்ட நாள் 1 December 2017.
  3. "Call Me by Your Name (2017)". பாக்சு ஆபிசு மோசோ. Archived from the original on 27 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்பிரல் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்_மீ_பை_யுவர்_நேம்&oldid=3718247" இலிருந்து மீள்விக்கப்பட்டது