திருக்காளத்தி நாதர் உலா
(காளத்தி நாதர் உலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருக்காளத்திநாதர் உலா கவிராச பிள்ளை எழுதிய 16 ஆம் நூற்றாண்டு நூல். இந்த நூலின் பெயர் சில ஏடுகளில் காளத்தியாள்வார் உலா [1] என்று உள்ளது. இது சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்ட நூல். [2]
நூலில் சொல்லப்படும் செய்திகள்
தொகு- சிவன் ஐம்பூதமாய் விளங்குகிறான். [3]
- காளத்தியில் சிவன் ஒலி தரும் காற்றாக விளங்குகிறான்.
- காளத்தி ஆற்றூர் வளநாட்டின் பகுதி
- காலத்திக்கு மூன்று சோழர்கள் விக்கிரம சோழன், குலோத்துங்கன், இராசேந்திர சோழன் திருப்பணி செய்தனர். அதனால் இவ்வூருக்கு மும்முடிச் சோழபுரம் என்னும் பெயரும் உண்டு.
- வரகுண பாண்டியன் இவ்வூரை வழிபட்டான்
- நக்கீர தேவ நாயனார் பாடிய கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி என்னும் நூலை நினைவுகூர்கிறார்.
- அணு, துடி, கலை, காட்டை, கணம், மாத்திரை, எல்லை, கடிகை, நண்பகல், காலை, உச்சி, அந்தி, திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம், ஓரை, மாதம், உவா, வருடம், உகம், கற்பம், சங்காரம் – முதலான கால கால-அளவைப் பெயர்கள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
- பச்சை, வடம், கலை, மேற்கட்டி, சிறுபாகை, அணைபாகு, சட்டை, கச்சு, பவந்தம், துப்பட்டி, துண்டம், கோவணம், போர்வை, வேட்டி – முதலானவை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பருத்தி ஆடைகள்.
- கடல், கழிநீர், ஏரி, நீர்க்குளம், கால்வாய், துரவு-கிணறு, நீர் வற்றாத தடாகம், மடு, கேணி, வாடவி, ஆறை, அகழ், ஊற்று, ஓடை – என்னும் நீர்நிலைகளின் பெயர் தொனிக்குமாறு பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
- பெதும்பைப் பருவத்தில் கழங்காடுதலும், மங்கைப் பருவத்தில் அம்மானையாடுதலும் சொல்லப்படுகின்றன.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑ காளத்தி ஆள்வா = காளத்தி நாதர்
- ↑
சிவபெருமான் உலா வரும்போது கண்டு காமுற்ற மங்கை தன் தோழியரிடம் ‘இவர் எம்மை ஆள்வாரோ’ என வினவ, அவர்கள் ‘நீ காமுறுவது தகாது’ எனக் கூறும் பகுதி இந்த நூலின் நயத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு
-கோதையே
வண்டு இலங்கும் மேனியிலை வாழும் மடவாரைக்
கண்டிலையோ, நெஞ்சம் கரந்தாயோ – பண்டு நீ
கற்ற கலை எல்லாம் கழன்ற கலையுடனே
அற்றவோ? நின்னை அவர் கொண்டால் – உற்று அணைக்க
மாமியார் உண்டோ, மலையிற் பெருநீலி
ஆம் அவளும் சக்களத்தி ஆகாளோ? – காமிக்கை
தோல் சேலைக்கோ, பிச்சைச் சோற்றுக்கோ, ஓட்டுக்கோ
மேல் சாம்பல் பூச்சுக்கோ, சுடலை வீட்டிற்கோ – நாற் சந்தி
அம்பலத்துக்கோ, எலும்பின் ஆபரணம் பூணுகைக்கோ
வெம் பணி மாலைக்கோ, பேய் வேலைக்கோ, - சம்பந்தம்
நல் இடத்தில் சோதித்தாய் நம் போலியர் இருக்கும்
இல் அறத்துக்கு இத்தனையும் ஏற்குமோ - ↑
- ஆரூரிலே புவியாய், ஆனைக்காவில் புனலாய்
- சீரூர் அருணையிலே செந்தீயாய்ப் – பேர் ஊரும்
- ஏகாம்பரத்தில் இயங்கு ஒலியாய்த் தன் ஊரில்
- ஆகாயமாய் நுற்கும் ஆடலான் இந்நூலில் வரும் கண்ணிகள்