காளிநகர்

உத்தரப் பிரதேச கிராமம்

காளிநகர் (Kalinagar) என்பது இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும் நகரப் பஞ்சாயத்தும் ஆகும். காளிநகர் என்பது பிலிபித் மாவட்டத்தின் புதிய தாலுக்காவாகும். இதன் அஞ்சல் குறியீட்டு எண்-262124 ஆகும்.

காளிநகர்
Kalinagar
நகரம்
காளிநகர் Kalinagar is located in உத்தரப் பிரதேசம்
காளிநகர் Kalinagar
காளிநகர்
Kalinagar
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°37′N 80°06′E / 28.62°N 80.1°E / 28.62; 80.1
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பிலிபித் மாவட்டம்
ஏற்றம்
184 m (604 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்9,984
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

புவியியல்

தொகு

காளிநகர் 28.62° வடக்கு 80.1° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.[1] கடல் மட்டத்திலிருந்து இதன் சராசரி உயரம் 184 மீட்டர் (603 அடி) ஆகும்.  

மக்கள்தொகை

தொகு

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காளிநகர் 9,984 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது.[2] மக்கள் தொகையில் ஆண்கள் 53% ஆகவும், பெண்கள் 47% ஆகவும் இருந்தனர். காளிநகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 34% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% என்பதை விட குறைவாகும். ஆண்களின் கல்வியறிவு 45% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 22% ஆகவும் இருந்தது. காளிநகரின், மக்கள் தொகையில் 20% பேர் 6 வயதிற்குட்பட்டவர்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. Falling Rain Genomics, Inc - Kalinagar
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிநகர்&oldid=4126451" இலிருந்து மீள்விக்கப்பட்டது