காளியூட்டு

காளியூட்டு என்பது கும்ப மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை நாளில்[1] நடக்கும் கலை. இதை காளிநாடகம் என்றும் அழைப்பர். காளிக்கும் தாரிகனுக்கும் நிகழ்ந்த போரைக் குறித்து நிகழ்த்துவது ஆகும்.

ஐதீகம்

தொகு

கும்ப மாதத்தின் மூன்றாவது வெள்ளிக் கிழமையன்று, சார்க்கரர் கோயிலில் நடக்கும் ஒரு விழா காளியூட்டு. மக்களை வதைத்து, துன்பங்கள் ஏற்படுத்திய தாரிகனை, காளி கொன்று மக்களைக் காத்து நிற்பதை நினைவுகூர்வர்.

வரலாறு

தொகு

திருவிதாங்கூர் பரணாதிகாரியாக இருந்த பேரரசர் மார்த்தாண்ட வர்மா, காயங்குளம் ராஜாவாக ஆன பின்பு, போருக்கு] புறப்படும் முன்பு சர்க்கரர் கோயிலில் காளியூட்டை நிகழ்த்தினார்.[1]. அந்த யுத்தத்தில் வென்று, காயங்குளம் கூடி திருவிதாங்கூரோடு சேர்த்ததினால் ஆண்டுக்கொரு முறை நடத்தி வரும் நிகழ்வு இது.

சடங்குகள்

தொகு

'முடியுழிச்சில்' என்னும் சடங்கு நிகழ்த்தப்படும். அன்று காளி, தாரிகனை நிலத்தில் போரில் வென்றதால், அதைக் கொண்டாடும் விதத்தில், குலைவாழையும் கும்பளவும் வெட்டி நட்டுக் கொண்டாடுவர். இது கைலாயத்தில் வாழும் பரமசிவனை சென்றடைவதாக நம்புகின்றனர். இத்துடன், வெள்ளாட்டம் களி, குருத்தோலையாட்டம், நாரதன் புறப்பாடு, நாயர் புறப்பாடு, ஐராணி புறப்பாடு, கணியாரு புறப்பாடு, புலையர் புறப்பாடு, முடியுழிச்சில், நிலத்தில் போர் என்னும் ஒன்பது சடங்குகளும் நிகழ்த்தப்படுகின்றன.

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 மலையாளம் வெப்‌துனியா.கோம்[தொடர்பிழந்த இணைப்பு]

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளியூட்டு&oldid=3863730" இலிருந்து மீள்விக்கப்பட்டது