காவிரி ஆறு, மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தில் பாயும் ஒரு ஆறு
காவிரி (Kaveri) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில், நருமதை ஆற்றின் கிளை ஆறாக பாயும் ஆறாகும். இது 40 கிலோமீட்டர் நீளம் பாய்கிறது. மேலும் இதன் வடிநிலப் பரப்பு 954 கிமீ² ஆகும்.[1]
காவிரி Kaveri | |
---|---|
அமைவு | |
Country | இந்தியா |
State | Madhya Pradesh |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | நருமதை |
⁃ அமைவு | ஓங்காரேஸ்வரர் அருகில் |
⁃ ஆள்கூறுகள் | 22°13′55″N 76°10′14″E / 22.231973°N 76.170469°E |
⁃ உயர ஏற்றம் | 173 மீ |
நீளம் | 40 km (25 mi) |
வடிநில அளவு | 954 km2 (368 sq mi) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
வடிநிலம் | நருமதை |
நருமதை ஆறு தோன்றி அது 882 கி.மீ. தொலைவில் உள்ள மந்ததார் (ஓங்காரேஸ்வரர்) அருகே வரும்போது அத்துடன் காவிரி ஆறு கலக்கிறது.[1] நருமதை ஆற்றின் புகழைப் போன்றும் நூலான நர்மதா மஹாத்மியம் என்ற நூலானது, நருமதை மற்றும் காவிரி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தை புனித தீர்த்தமாக கூறுகிறது. தெற்கில் பாயும் காவிரியையும், மத்தியப் பிரதேசத்தின் காவிரி ஆற்றையும் சேர்த்து மச்ச மற்றும் கூர்ம புராணங்களில் பெருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.[2]
மச்ச புராணம் மற்றும் பத்ம புராணம் போன்றவை இந்த கூடுதுறையின் பெருமையைக் கூறுகின்றன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 K. Sankaran Unni 1996, ப. 16.
- ↑ 2.0 2.1 Pranab Kumar Bhattacharyya 1977, ப. 272.