காவிரி விரைவு வண்டி

காவிரி விரைவு ரயில் அல்லது காவிரி விரைவுத் தொடருந்து (ஆங்கிலம்: Kaveri Express) என்பது தமிழகத்தின் சென்னை எழும்பூர் சந்திப்பிற்கும், கர்நாடக. மாநிலத்தின் மைசூரூ சந்திப்பிற்கும் இடையில் தென்னக ரெயில்வே துறையால் இயக்கப்படும் விரைவுத் தொடருந்தாகும்.[1] காவேரி ஆறு பயணிக்கும் பாதையையும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களை காவேரி ஆறு இணைப்பதையும் குறிக்கும் விதமாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வண்டி செப்டம்பர் 11, 1980 முதல் அறிமுகம் செய்யப்பட்டு நாள்தோறும் 497 கி.மீ பயணம் செய்கிறது. மணிக்கு 52 கிலோ மீட்டர் வேகத்தில் செயல்படுவதன் மூலம் இந்தியாவின் விரைவு ரயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது

Kaveri Express

காவேரி விரைவு தொடருந்து

ಕಾವೇರಿ ಎಕ್ಸ್‌ಪ್ರೆಸ್‌
கண்ணோட்டம்
வகைவிரைவு இரயில்
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு மற்றும் கர்நாடகா
முதல் சேவைசெப்டம்பர் 11, 1980; 44 ஆண்டுகள் முன்னர் (1980-09-11)
நடத்துனர்(கள்)இந்திய இரயில்வே
வழி
தொடக்கம்சென்னை எழும்பூர்
இடைநிறுத்தங்கள்23
முடிவுமைசூரூ சந்திப்பு
ஓடும் தூரம்497 km (309 mi)
சராசரி பயண நேரம்9 மணி 25 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
தொடருந்தின் இலக்கம்16021 / 16022
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஒரடுக்கு, ஈரடுக்கு மற்றும் மூன்றடுக்கு குளிர்சாசன பெட்டிகள், படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் சாதாரண வகுப்பு பெட்டிகள்
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
காணும் வசதிகள்பெரிய சாளரம்
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்52 km/h (32 mph) நிறுத்த நேரம் உட்பட சராசரி

வரலாறு

தொகு

1980ம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரூ மற்றும் மைசூரூ நகரங்களுக்கு இடையே சாமுண்டி விரைவு தொடருந்தின் எதிர்ப்பாதையில் இயக்கப்பட்டு வந்த இந்த விரைவு தொடருந்தானது 1998ம் ஆண்டு முதல் சென்னை வரை நீட்டிக்கப்பட்டது.

சேவைகள்

தொகு

தினசரி செயல்படும் இந்த விரைவு தொடருந்து சேவையில் ஒரடுக்கு, ஈரடுக்கு மற்றும் மூன்றடுக்கு குளிர்பதன வசதியுடன் கூடிய பெட்டிகள், படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகள் மற்றும் சாதாரண பெட்டிகள் உள்ளன. 16021 மற்றும் 16022 என்ற வண்டி எண்களுடன் செயல்படும் சென்னை சென்ட்ரல் - மைசூரு நகரங்களுக்கிடைப்பட்ட இந்த விரைவு ரயிலானது எதிர் எதிர் வரும் வழிப்பங்கீட்டு ரயில்களாகும்.

வழித்தடமும் நிறுத்தங்களுக்கான நேரமும்

தொகு
எண் நிலையத்தின் பெயர் (குறியீடு) வரும் நேரம் புறப்படும் நேரம் நிற்கும் நேரம் கடந்த தொலைவு நாள்
1 சென்னை சென்ட்ரல் (MAS) தொடக்கம் 21:15 0 0 கி.மீ 1
2 திருவள்ளூர் சந்திப்பு TRL 21:55 21:55 1 நிமி 42 கி.மீ 1
3 அரக்கோனம் சந்திப்பு (AJJ) 22:18 22:20 2 நிமி 69 கி.மீ 1
4 அனவர்திகான் பேட்டை (AVN) 22:34 22:35 1 நிமி 81 கி.மீ 1
5 சோளிங்கூர் (SHU) 22:44 22:45 1 நிமி 90 கி.மீ 1
6 வாலாஜா சாலை சந்திப்பு(WJR) 22:59 23:00 1 நிமி 105 கி.மீ 1
7 காட்பாடி சந்திப்பு காட்பாடி (KPD) 23:28 23:30 1 நிமி 130 கி.மீ 1
8 ஆம்பூர் (AB) 00:09 00:10 1 நிமி 182 கி.மீ 1
9 ஜோலார்பேட்டை (JTJ) 00:50 00:55 5 நிமி 214 கி.மீ 1
10 குப்பம் (KPN) 01:24 01:25 1 நிமி 257 கி.மீ 1
11 பங்காருப்பேட்டை (BWT) 01:53 01:55 2 நிமி 292 கி.மீ 1
12 வொய்ட்ஃபீல்ட் சந்திப்பு (WFD) 02:29 02:30 1 நிமி 338 கி.மீ 1
13 கிருஷ்ணராஜபுரம் சந்திப்பு (CBE) 02:38 02:40 2 நிமி 348 கி.மீ 1
14 பெங்களூரூ கிழக்கு சந்திப்பு (CBE) 02:49 02:50 1 நிமி 355 கி.மீ 1
15 பெங்களூரூ கண்டோன்மெண்ட் சந்திப்பு (CBE) 02:58 03:00 2 நிமி 358 கி.மீ 1
16 கிருஷ்ணசாகராஜபுரம் சந்திப்பு, பெங்களூரூ (CBE) 03:50 04:00 2 நிமி 362 கி.மீ 1
17 கென்கிரி சந்திப்பு (CBE) 04:19 04:20 1 நிமி 374 கி.மீ 1
18 பிடதி சந்திப்பு (CBE) 04:33 04:34 1 நிமி 391 கி.மீ 1
19 ராமநகரம் சந்திப்பு (CBE) 04:44 04:45 1 நிமி 406 கி.மீ 1
20 சென்ன பட்னா சந்திப்பு (CBE) 04:54 04:55 1 நிமி 417 கி.மீ 1
21 மதூர் சந்திப்பு (CBE) 05:14 05:15 1 நிமி 436 கி.மீ 1
22 மாண்டியா சந்திப்பு (CBE) 05:34 05:35 1நிமி 455 கி.மீ 1
23 பாண்டவபுரா சந்திப்பு (CBE) 05:59 06:00 1 நிமி 480 கி.மீ 1
24 மைசூரு சந்திப்பு (CBE) 06.40 முடிவு 0 500 கி.மீ 1

பயணப் பெட்டிகளின் தன்மை

தொகு

இந்த தொடருந்தில் 14 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும் இரண்டு மூன்றடுக்கு, இரண்டு இரண்டடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளும், மூன்று சாதாரண பெட்டிகளும், இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொஆண்ட இரண்டு பெட்டிகளுமாக மொத்தம் 23 பெட்டிகளைக் கொண்டுள்ளது. முன்னதாக பெங்களூரூ சந்திப்பில் டீசல் இழுவை இயந்திரமானது மின்சார இழுவை இயந்திரத்தால் மாற்றப்பட்டு பெங்களூரூவில் இருந்து இயக்கப்பட்டு வந்தது.[2]. சென்னை முதல் மைசூரூ வரை முழுவதும் மின்சாரமயமாக்கப் பட்டபின்பு முழு வழித்தடத்திலும் மின்சார இழுவை இயந்திரமே பயன்படுத்தப்படுகிறது.

வண்டி எண் 16021

தொகு

இது சென்னை சென்ட்ரல் சந்திப்பில் இருந்து, மைசூரு சந்திப்பு வரை செயல்படுகிறது. 9 மணி நேரம் மற்றும் 25 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 23 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 53 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவினை 9 மணி நேரம் மற்றும் 25 நிமிடங்களில் கடக்கிறது. 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்னக ரெயில்வேயினால் இந்த தொடருந்திற்கும் அளிக்கப்பட்டுள்ளது. இதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.

EN– UR – S1 – S2 – S3 – S4 – S5 – S6 – S7 – S9 – S10 - S11 – S12 – S13 - -S14 - B1 – B2 - A1 – A2 - HA1– UR - GS

வண்டி எண் 16022

தொகு

இந்த வண்டியனது கர்நாடக மாநிலம் மைசூரூ சந்திப்பில் இருந்து, சென்னை சென்ட்ரல் சந்திப்பு வரை செயல்படுகிறது. 10 மணி நேரம் மற்றும் 5 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 23 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 50 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவினை 10 மணி நேரம் மற்றும் 5 நிமிடங்களில் கடக்கிறது. 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்னக ரெயில்வேயினால் இந்த தொடருந்திற்கும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும். இதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.

EN– GS - UR – S14 – S13 – S12 – S11 – S10 – S9 – S8 – S7 – S6 – S5 – S4 – S3 – S2 – S1 B2 – B1 - A2 – A1 - HA1– UR - GS

மேற்கோள்கள்

தொகு
  1. [1], Southern Railways, 05 December 2015
  2. [2], indiatimes.com, 27 February 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவிரி_விரைவு_வண்டி&oldid=3609617" இலிருந்து மீள்விக்கப்பட்டது