காவேரி பாலம்

காவேரி பாலம் (Kaveri Palam) என்பது தமிழ்நாட்டின், திருச்சியில் அமைந்துள்ளது ஒரு பாலம் ஆகும். காவேரி பாலம் திருச்சியையும் ஸ்ரீரங்கம் தீவினையும் இணைக்கும் முக்கிய பாலமாகும்.

இந்த பாலம் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது.[1] இப்பாலம் பழைய பழுதடைந்த பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்டது. இது திருச்சி மக்களின் மனதில் நீங்கா நினைவாக பதிந்துள்ளது.

ஒவ்வொரு மாலை வேளையிலும் அனைத்து வயதக்கொண்ட மக்களும், நண்பர்களுடன் கூட்டமாக மகிழ்வதனை இங்கு காணலாம். குழந்தைகள் ஆர்வமுடன் காவிரி ஆற்றுப்படுகையை பார்ப்பதையும், வயது முதிர்ந்தோர் நடைப்பயிற்சி மேற்கொள்வதையும் காணலாம்.

சமீப காலமாக திருச்சியின் முக்கிய இடங்களில் ஒன்றாக காவேரி பாலமும் திகழ்கிறது.

குறிப்புகள்

தொகு
  1. As of July 2008


"https://ta.wikipedia.org/w/index.php?title=காவேரி_பாலம்&oldid=2523354" இலிருந்து மீள்விக்கப்பட்டது