காவேரி மாதவன்

காவேரி மாதவன் (Cauvery Madhavan) அயர்லாந்தில் வசிக்கும் ஓர் இந்திய எழுத்தாளராவார். தனது எழுத்தில் புலம்பெயர்ந்த அனுபவங்களைப் பயன்படுத்தி இவர் எழுதுகிறார்.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னை நகரில் காவேரி பிறந்தார். படைத்துறை பணித் தலைவர் சி. குருசாமி மற்றும் பொல்லம்மா குருசாமி ஆகியோருக்கு மகளாக இவர் பிறந்தார். சென்னையில் ஒரு நகல் எழுத்தாளராக பணிபுரிந்தார். அறுவை சிகிச்சை நிபுணர் பிரகாசு மாதவனை காவேரி திருமணம் செய்து கொண்டார். 1987 ஆம் ஆண்டில் தம்பதியர் இருவரும் அயர்லாந்தின் கில்டேர் மாகாணத்திலுள்ள சிட்ராபன் என்ற கிராமத்திற்கு குடிபெயர்ந்தனர். அங்கு இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

காவேரியின் முதல் நாவல் 2000 ஆம் ஆண்டு வெளிவந்தது. அயர்லாந்தின் கார்க் மாகாணத்திலுள்ள பின்தங்கிய எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கான அனாம் காரா எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் என்ற சிறப்பு பயிற்சித்திட்டத்தில் கலந்து கொண்டு இந்நாவலைத் தொடங்கினார். இரண்டாவது நாவல் 2003 ஆம் ஆண்டிலும் மூன்றாவது நாவல் 2020 ஆம் ஆண்டிலும் வெளிவந்தன.

அயர்லாந்து மற்றும் ஐரோப்பாவை இந்தியாவுடன் தொடர்புபடுத்துகின்ற வகையில் இவரது படைப்புகள் ஆக்கப்படுகின்றன. ஐரிய டைம்சு, ஈவினிங் எரால்டு போன்ற தினசரிகளிலும் மாத இதழான டிராவல் எக்சுட்ராவிலும் காவேரி எழுதிவருகிறார்.[1][2][3][4][5][6][7][8]

நூல் விவர அட்டவணை

தொகு
  • Paddy Indian. BlackAmber. 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-901969-04-7.
  • The Uncoupling. BlackAmber. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-901969-10-8.
  • The Tainted. HopeRoad Publishing Limited. 2020. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-9164671-8-7.

மேற்கோள்கள்

தொகு
  1. "Practising yoga does not make you less Catholic". The Irish Times. 2013-03-21. பார்க்கப்பட்ட நாள் 2019-12-12.
  2. "Cauvery Madhavan". Ricorso. பார்க்கப்பட்ட நாள் 2019-12-12.
  3. "'Paddy Indian' welcomed by god of fun". The Irish Times. 2019-12-10. பார்க்கப்பட்ட நாள் 2019-12-12.
  4. "Manchester Masti - Cauvery Madhavan Interview". BBC. 2002-12-02. பார்க்கப்பட்ட நாள் 2019-12-12.
  5. Ray, M.K.; Kundu, R. (2004). Studies in Women Writers in English. Studies in Women Writers in English. Atlantic Publishers & Distributors. p. 123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-269-0816-5. பார்க்கப்பட்ட நாள் 2019-12-12.
  6. Tunca, D.; Wilson, J. (2016). Postcolonial Gateways and Walls: Under Construction. Cross/Cultures. Brill. p. 329. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-33768-8. பார்க்கப்பட்ட நாள் 2019-12-12.
  7. Wulff, H. (2017). Rhythms of Writing: An Anthropology of Irish Literature. Bloomsbury Publishing. p. 123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4742-4415-2. பார்க்கப்பட்ட நாள் 2019-12-12.
  8. Tucker, Amanda (2014-02-28). "Strangers in a strange land?: the new Irish multicultural fiction". Literary visions of multicultural Ireland. Manchester University Press. pp. 50–63. எண்ணிம ஆவணச் சுட்டி:10.7228/manchester/9780719089282.003.0003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7190-8928-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவேரி_மாதவன்&oldid=3857299" இலிருந்து மீள்விக்கப்பட்டது