கா. அரங்கசாமி
பேராசிரியர் கா. அரங்கசாமி (பி. 1937) ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர். ஈரோடு மாவட்டம் வெள்ளியாம்பாளையத்தில் பிறந்த இவர், முதலில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலும், பிறகு, கோபி கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும், உதவி முதல்வராகவும், 28 ஆண்டு காலம், பணியாற்றி ஓய்வு பெற்றவர். குமரகுருபரர், சிவப்பிரகாசர் நீதி நூற்கள் குறித்து ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டமும், தமிழ்க்கல்வெட்டுகளில் அறவியல் கோட்பாடுகள் (கி.மு 3 - கி.பி 19) எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றவர். இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டக்குழுத் தலைவர், வினாத்தாள் குழுத்தலைவர், கல்வியாளர் குழு உறுப்பினர் போன்ற பணிகளையும் ஏற்று சிறப்பாகச் செய்திருக்கிறார். இவர் கல்வெட்டியல், தொல்லியல், நாட்டுப் புறவியல், ஓலைச் சுவடிகள், சிவனிய மெய்யியல் போன்ற துறைகளிலும் சிறப்பான பணிகளாற்றியிருக்கிறார். இவர் கல்லூரிப் பணியின் போது ஆய்வு நெறியாளராக இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆய்வுப் பணிகளில் வழிகாட்டி இருக்கிறார். தற்போதும் ஆய்வு நெறியாளராக பலருக்கும், ஐ.ஏ.எஸ் தமிழ் தேர்வு மாணவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார்.
இதழ்ப்பணிகள்
தொகு- கொங்கு இதழின் இணை ஆசிரியராக 8 ஆண்டுகள் பணி.
- மலையரசி - இதழின் ஆசிரியராக 2 ஆண்டுகள் பணி.
- சாது சங்கொலி, சிவ சாந்தலிங்கர், மக்கள்-சிந்தனை , கொங்கு இதழ்கள் ஆகியவற்றிலும் துணை ஆசிரியராகப் பங்களிப்பு செய்திருக்கிறார்.
கள ஆய்வு
தொகு- நூற்றுக்கும் மேற்பட்ட ஏட்டுச் சுவடிகள் ஆய்வும் தொகுப்பும்.
- நூற்றுக்கும் மேற்பட்ட நடுகல், கல்வெட்டுக்கள் படியெடுப்பும் , ஆய்வும்.
- பல நூறு நாட்டுப்புறப் பாடல்கள் தொகுப்பும் ஆய்வும்.
- மறைந்த கொங்கு நாட்டு நகரங்களை ஆய்ந்து பழைய கற்கால அடையாளங்களைக் கொண்ட மயிலாபுரி,அயிலாபுரி பட்டணங்களை பற்றிய ஆய்வுகள்.
வெளியிட்ட புத்தகங்கள்
தொகு- சிவசமய வரலாறு (பகுதி 1)
- மொழியும் தரமும் அறிவியல் பார்வை (8 தொகுதிகள்)
- கருணை அந்தாதி
- தமிழ்க் கல்வெட்டுக்களில் அறவியல் கோட்பாடுகள்
- கொங்கு நாட்டுப்புற பாடல்கள்
- மனோன்மணியம் ஆய்வுக் கட்டுரைகள்
- பட்டக்காரர் பாளையக்காரர் ( கருத்தரங்கக் கட்டுரைகள்)
- மோரூர்க் காங்கேயன் ( கவிதை நாடகம்)
- பூந்துறைப் புராணம்
- நிதுக்காரய்யன் (புதினம்)
- பூந்துறை நாட்டுக் காடகூட்ட வேளாளர் வரலாறு
- அறவியலும் பண்பாடும்
- கொங்கு நாட்டுப் புறப்பாடல்கள் (ஆய்வுக் கட்டுரைகள்)
- கொங்கு நாட்டுப் புலவர்கள்
- கொங்குக் கட்டுரை மணிகள்
- தீரன் சின்னமலை (மேடை நாடகம். தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றது)
- வானிலா (கவிதை நாடகம். தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றது)
வெளிவரவுள்ள ஆய்வு நூற்கள்
தொகு- மொழியும் தரமும் -அறிவியல் பார்வை
- உலக அறவியலும் திருக்குறள் அறவியலும்
- சிவ மெய்யியலும் உலக மெய்யியலும்,
- சித்தர் பாடல்கள்
- கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள் தொகுப்பும் ஆய்வும்
- கொங்கு கல்வெட்டுக்கள் காட்டும் மக்கள் வரலாறு
சொற்பொழிவுகள்
தொகு- ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் பம்பாய் , கல்கத்தா, தமிழ்நாடு முழுவதும் தமிழ்ச்சங்கங்களிலும், தொலைக்காட்சிகளிலும் சொற்பொழிவுகள் செய்திருக்கிறார்.
- கடந்த 35 ஆண்டுகளாகப் பட்டிமன்றம், வழக்காடு மன்றம்,கவியரங்கம் போன்றவற்றில் பங்களிப்பாளராகவும், தலைவராகவும் பங்களிப்பு செய்திருக்கிறார்.
- கோபியில் சித்தாந்த மெய்யியல், திருமந்திரம், கடந்த 30 ஆண்டுகளாக வகுப்பு நடத்துதல்.
- அந்தியூரில் கடந்த 30 ஆண்டுகளாக திருவாசகம், தேவாரம், கீதை, கந்தபுராணம், பெரிய புராணம், வகுப்புகள் நடத்துதல்.
சிறப்புகள் மற்றும் பட்டங்கள்
தொகு- பாவலர்
- கல்வெட்டியல் அறிஞர்
- தமிழ் மாமணி
- திருமுறைத்தென்றல்
- சித்தாந்த நன்மணி