பாரதியார் பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1982இல் உருவானது. கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கோயம்புத்தூர் முதுநிலை மையமே இப்பல்கலைக்கழகமாக உருமாறியது.
![]() | |
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Educate to Elevate பல கல்வி தந்து இந்தப்பாரை உயர்த்திட வேண்டும் |
---|---|
வகை | பொதுத்துறை |
உருவாக்கம் | 1982 |
வேந்தர் | பன்வாரிலால் புரோகித்[1] |
துணை வேந்தர் | பேராசிரியர் பி. கலைராஜ் |
பதிவாளர் | மரு. கே. முருகன் |
அமைவிடம் | கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா 11°2′23.17″N 76°52′43.72″E / 11.0397694°N 76.8788111°Eஆள்கூறுகள்: 11°2′23.17″N 76°52′43.72″E / 11.0397694°N 76.8788111°E |
வளாகம் | நகர், 1,000 ஏக்கர்கள் (404.7 ha) |
சேர்ப்பு | UGC, NAAC, NCTE, ACU |
இணையதளம் | www.b-u.ac.in |
இந்தப் பல்கலைக் கழகத்தின் கீழ், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள, 133 அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்படுகின்றன. [2]
பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள்தொகு
பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 133 உறுப்புக் கல்லூரிகள் செயல்படுகின்றன, அதில் 13 அரசுக் கல்லூரிகள், 1 வான்படை நிர்வாக கல்லூரி, 3 இணைக் கல்லூரிகள், 1 பல்கலைக்கழகம், 16 அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் 99 சுயநிதி கல்லூரிகள். [3]
தரவரிசைதொகு
பாரதியார் பல்கலைக்கழகம் 2020 ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசைப்படி இந்திய அளவில் 21வது இடத்தை பெற்றுள்ளது. [4]
பல்கலைக்கழக விடுதிகள்தொகு
- இளங்கோ விடுதி
- கம்பர் விடுதி
- திருவள்ளுவர் விடுதி
- சேக்கிழார் விடுதி
- செல்லம்மாள் விடுதி
- கண்ணம்மாள் விடுதி
- ஆசிரியர் விடுதி
- எஸ். சி. மகளிர் விடுதி
மேற்கோள்கள்தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ த. சத்தியசீலன் (2018 ஆகத்து 30). "துணைவேந்தர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் காலி: நிர்வாகச் சிக்கலில் தவிக்கும் பாரதியார் பல்கலைக்கழகம்". செய்திக் கட்டுரை. காமதேனு. பார்த்த நாள் 30 ஆகத்து 2018.
- ↑ "Affiliated Colleges List". பார்த்த நாள் 5 April 2018.
- ↑ "India Rankings 2020: Overall". தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு. பார்த்த நாள் 27 நவம்பர் 2020.