வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திண்டல், ஈரோடு

வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, என்பது ஈரோடு மாவட்டம், ஈரோடு, திண்டலில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும்.[1] இது பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவுப்பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும்.[2] இக்கல்லூரி 1970இல் தொடங்கப்பட்டது.

வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
குறிக்கோளுரைஉள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
வகைசுயநிதி
உருவாக்கம்1970
முதல்வர்மரகதம்
மாணவர்கள்6300
அமைவிடம், ,
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்
இணையதளம்vcw.ac.in

அறிமுகம்

தொகு

இக்கல்லூரி ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை சாலையில், திண்டலில் அமைந்துள்ளது. இக்கல்லூரி உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்னும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் 23 இளநிலைப் படிப்புகளும், 13 முதுநிலைப் பாடப் பிரிவுகளும் உள்ளது. 2018 ஆண்டு அடிப்படையில் இக்கல்லூரியில் 250 ஆசிரியர்களும், 120 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் உள்ளனர். மேலும் இக்கல்லூரியானது தேசிய தர மதிப்பீடு நிா்ணய ஆணையத்தின்(NAAC) அதிகப்பட்சமான அங்கீகாரம் பெற்றுள்ளது.

சான்றுகள்

தொகு
  1. "ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு". செய்தி. தினமணி. 9 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2018.
  2. "வேளாளர் மகளிர் கல்லூரி". அறிமுகம். தினமலர் கல்விமலர். பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2018.