கா. கந்தசாமி

இந்திய அரசியல்வாதி

கா. கந்தசாமி (K. Kandasamy)(பிறப்பு 20 சனவரி 1948-இறப்பு 11 பிப்ரவரி 2018) என்பவர் இந்திய அரசியல்வாதி, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள பச்சம்பட்டியினைச் சார்ந்தவர். இவர் சேலம், அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பினை முடித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினை சார்ந்த இவர் தலைவாசல் சட்டமன்றத் தொகுதிக்கு 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலில் இராசிபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இரண்டாவது முறையாகத் தமிழகச் சட்டமன்றத்திற்கு 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குன்னூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Biographical Sketch of Member of XI Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-06-02.
  2. "Former MP Kandasamy dead". The Hindu (in Indian English). 2018-02-11. பார்க்கப்பட்ட நாள் 2022-06-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._கந்தசாமி&oldid=3440320" இலிருந்து மீள்விக்கப்பட்டது