கா. வை. சுப்பிரமணிய ஐயர்

(கா. வை. சுப்ரமணிய அய்யர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காந்தாடை வைத்யா சுப்ரமணிய அய்யர் (K. V. Subrahmanya Aiyar)(1875 – 7 நவம்பர் 1969) என்பவர் தமிழ் கல்வெட்டியல் மற்றும் வரலாற்றாளர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டுகளைத் தமிழ்ப் பிராமி வடிவமாகத் தீர்மானித்த முதல் நபராகக் கருதப்படுகிறார்.[1][2][3]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

சுப்ரமணிய அய்யர் 1875இல் கோயம்புத்தூர் பிறந்தார். திருச்சிராப்பள்ளியில் கல்வி பயின்றார். கல்வி முடிந்ததும், அய்யர் கோயம்புத்தூர் அருகிலுள்ள ஒட்டச்சத்திரத்தில் ஆட்சியர் அலுவலக பணியினைப் பெற்றார். இங்கு இவரது திறன்களைத் தலைமை கல்வெட்டியலாளர் வலையாட்டூர் வெங்கையா கவனித்து அங்கீகாரம் கொடுக்கும் வகையில் தன்னுடைய அணியில் 1906ஆம் ஆண்டில் சேர்த்தார்.

தொழில் தொகு

சுப்ரமணிய அய்யர் 1906 முதல் 1932 வரை அரசாங்க கல்வெட்டு ஆசிரியராக பணியாற்றினார். இவர் தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதிகள் VI, VII மற்றும் VIIIஐத் திருத்தி எபிகிராஃபியா இண்டிகாவுக்காக எழுதினார். இவர் எழுதிய பல ஆய்வுக் கட்டுரைகள் "எப்பிகிராபியா இன்டிக்கா" என்னும் இந்தியக் கல்வெட்டுயியல் சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டில் கிடைத்த பண்டைக்காலத்தைச் சேர்ந்த தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்களின் ஆய்வுகளில் இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார். திருவிதாங்கூர் தொல்லியல் வரிசையின் இரண்டாம், மூன்றாம், நான்காம் தொகுதிகளுக்கும் இவர் ஆசிரியராக இருந்துள்ளார். "பண்டைய தக்காணத்தின் வரலாற்றுக் குறிப்புக்கள்" (Historical Sketches of Ancient Dekhan) என்னும் ஒரு ஆய்வு நூலையும் இவர் எழுதி வெளியிட்டார். இது மூன்று தொகுதிகளைக் கொண்டது.

தமிழ்க் குகை கல்வெட்டுகள் பற்றிய ஆராய்ச்சியிலும் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.[4] இவர் தமிழ்க் கல்வெட்டுகளின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.

1938ஆம் ஆண்டில், பண்டைய தெக்கானின் வரலாற்று ஓவியங்கள் தொகுதி-3 எனும் படைப்பை வெளியிட்டார்.

படைப்புகள் தொகு

  • Aiyar, K. V. Subrahmanya (1917). Historical Sketches of Ancient Deccan. Modern Printing Works. 
  • Aiyar, K. V. Subrahmanya (1924). The Earliest monuments of the Pândya country and their inscriptions. 

மேற்கோள்கள் தொகு

  1. "Records and revelations" இம் மூலத்தில் இருந்து 2010-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101021044255/http://www.hinduonnet.com/lr/2003/08/03/stories/2003080300280400.htm. 
  2. "Straight from the Heart - Iravatham Mahadevan: Interview with Iravatham Mahadevan". Varalaaru.com.
  3. "Jaina treasure trove in Mankulam village". http://www.thehindu.com/todays-paper/article365626.ece. 
  4. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=490

குறிப்புகள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._வை._சுப்பிரமணிய_ஐயர்&oldid=3765542" இலிருந்து மீள்விக்கப்பட்டது