கிகேல்லா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கைமினாப்பிடிரா
குடும்பம்:
யூலோபிடே
பேரினம்:
சிற்றினம்

கிக்கேல்லா ஓரைசே நரேந்திரன், 2005

கிகேல்லா என்பது யூலோபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஹைமனோப்டெரான் பூச்சிகளின் ஒரு வகை. இவை இந்தியாவில் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள நெற்பயிர்களிலிருந்து மட்டுமே அறியப்படுகின்றன. கிக்கேல்லா ஓரைசே என்ற ஒரு விவரிக்கப்பட்ட சிற்றினம் உள்ளது.

விளக்கம்

தொகு

கி. ஓரைசே பூச்சியின் உடல் நீளம் சுமார் 1.2 மி.மீ. ஆகும். இந்த பூச்சியை இதேபோன்ற மினோடெட்ராசுடிகசு சிற்றினத்திலிருந்து முதுகுப்பகுதியில் காணப்படும் சிறுகேடயம் போன்ற அமைப்பில் எந்த பள்ளங்களும் இல்லாததால் வேறுபடுத்தி அறியலாம். இதன் இறக்கைகள் மூன்று மடங்குக்கு மேல் அகலமாக இருக்கும். ஒரு இணை வால் மயிர்க்கால் மற்றவற்றை விட மிக நீளமானது.[1]

விருந்தோம்பி இனம் இதுவரை அறியப்படாத போதிலும், இந்தப் பூச்சி ஒட்டுண்ணியாகும். நெல் வயல்களுடனான இதன் தொடர்பு, இது ஒரு உயிரியல் கட்டுப்பாட்டு உயிரியாகச் செயல்படக்கூடிய இதன் செயல் நெல் தீங்குயிரியினைக் கட்டுப்படுத்த இதனை ஒட்டுண்ணியாகப் பயன்படுத்தலாம்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிகேல்லா&oldid=3626403" இலிருந்து மீள்விக்கப்பட்டது