கிங்ஸ்லி சுவாம்பிள்ளை

பேரருட்திரு யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை (Joseph Kingsley Swampillai, பிறப்பு: 9 டிசம்பர் 1936) இலங்கைத் தமிழ் கத்தோலிக்க குருவும், திருகோணமலை உரோமன் கத்தோலிக்க ஆயரும் ஆவார்.

பேரருட்திரு
கிங்ஸ்லி சுவாம்பிள்ளை
Kingsley Swampillai
திருகோணமலை ஆயர்
சபைகத்தோலிக்க திருச்சபை
மறைமாநிலம்கொழும்பு
மறைமாவட்டம்திருகோணமலை
ஆட்சி துவக்கம்17 மார்ச் 1983
ஆட்சி முடிவு3 சூன் 2015
முன்னிருந்தவர்லியோ ராஜேந்திரம் அந்தனி
பின்வந்தவர்நொயெல் இம்மானுவேல்
பிற தகவல்கள்
பிறப்பு9 திசம்பர் 1936 (1936-12-09) (அகவை 83)
ஊர்காவற்றுறை, இலங்கை
படித்த இடம்யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி

வாழ்க்கைதொகு

சுவாம்பிள்ளை 1936 டிசம்பர் 9 இல் இலங்கையின் வடக்கே ஊர்காவற்றுறையில் பிறந்தார்.[1] இவர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார்.[2][3][4]

பணிதொகு

சுவாம்பிள்ளை 1961 டிசம்பரில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.[1] 1983 மார்ச்சில் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்திற்கு ஆயராக நியமிக்கப்பட்டார்.[1] 2012 சூலையில் மட்டக்களப்பு தனியான மறைமாவட்டமாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து சுவாம்பிள்ளை திருகோணமலை மாவட்டத்தின் ஆயர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.[1] 2015 சூன் 3 இல் இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.[5][6][7]

மேற்கோள்கள்தொகு