வத்திக்கான் வானொலி
வத்திக்கான் வானொலி (இத்தாலியம்: Radio Vaticana) என்பது திருப்பீடம் மற்றும் வத்திக்கான் நகரின் அதிகாரப்பூர்வ ஒலிபரப்பு நிலையம் ஆகும்.
முதல் ஒலிபரப்பு | 1931 |
---|---|
வானொலி முறை | செய்தி, சமய விழாக்கள், இசை |
Transmitter coordinates | 41°54′14″N 12°27′0″E / 41.90389°N 12.45000°E |
Affiliations | World Radio Network |
உரிமையாளர் | உரோமைத் திரு ஆட்சிப்பீடத்தின் தொடர்பாடலுக்கான செயலகம் |
இணையதளம் | radiovaticana ta |
அமைப்பு
தொகுஇது வத்திக்கான் நகர நாட்டுக்குள் அமைந்திருக்கின்றது. வானொலியை வடிவமைத்த மார்க்கோனியால் அமைக்கப்பட்டு, திருத்தந்தை பதினொன்றாம் பயஸால் 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.[1] இவ்வானொலி இயேசு சபையினரால் நடத்தப்படுகின்றது.
ஒலிபரப்பு சேவை
தொகுஇது, தற்சமயம் 47 மொழிகளில் பண்பலை, செயற்கைக்கோள் மற்றும் இணையம் மூலமாக தனது சேவைகளை வழங்குகின்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் 61 நாடுகளில் பணிபுரிகின்றனர். இயேசு சபையைச் சார்ந்த அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி சே.ச., 2005ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதியிலிருந்து வத்திக்கான் வானொலி இயக்குனராக இருக்கிறார். வத்திக்கான் வானொலி, உலகின் மறைமாவட்டங்கள் அல்லது ஆயர்கள் பேரவைகளுக்கு வானொலி ஒலிபரப்புத் துறையில் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வழங்குகிறது.
இரண்டாம் உலகப் போரின்போது நாட்சி ஜெர்மனியின் வதைப்போர் முகாம்களைக் கண்டித்து முதன் முதலாகச் செய்திகளை ஒலிபரப்பியது வத்திக்கான் வானொலி ஆகும். மேலும் போரின்போது நேச நாடுகளுக்கு செய்தி அறியும் வழியாக இவ்வானொலி விளங்கியது. குடும்பங்கள் போர்க்கைதிகளைத் தொடர்புகொள்வதற்கு உதவியாக தகவல் அலுவலகம் ஒன்றையும் வானொலி நிறுவியது. 1940 க்கும் 1946 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 12 இலட்சத்து நாற்பதாயிரத்துக்கு(12,40,000) அதிகமான உதவித்தகவல்கள் ஒலிபரப்பப்பட்டன.
தமிழ் ஒலிபரப்பு
தொகு1965ம் ஆண்டு தமிழ் ஒலிபரப்பை இது துவக்கியது.[1] வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பை சிற்றலையிலும், இணையத்திலும் கேட்கலாம். சிற்றலை ஒலிபரப்பு: இந்திய நேரம் 20.20 - 20.40 (20 நிமிடங்கள்) - 15110 கி.ஹேட்ஸ்[2]
- இணையத்தில் இங்கே கேட்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "வத்திக்கான் வானொலி - எம்மைப் பற்றி". Archived from the original on 2014-02-19. பார்க்கப்பட்ட நாள் 2014-03-08.
- ↑ Vatican Radio frequency updates