கிசுகோ வட்டாரம்

கிசுகோ(ஆங்கிலம்:Kisko இந்தி: किसको ) இந்தியாவின் யார்க்கண்டு மாநிலம், லோகர்தக்கா மாவட்டத்திலுள்ள ஒரு நிர்வாக வட்டாரமாகும்.

மக்கள் தொகையியல்

தொகு

லோகர்தக்கா மாவட்டத்தின் கிழக்கு மண்டலத்தில் 65 கிராமங்களை உள்ளடக்கிய 14 கிராம பஞ்சாயத்துகள் கொண்டதாக கிசுகோ வட்டாரம் அமைந்துள்ளது. இவ்வட்டாரத்தின் மொத்த மக்கள் தொகை 83922 நபர்கள் ஆகும். இம்மக்கள் தொகையில் 41,989 நபர்கள் ஆண்களாகவும், 41,933 நபர்கள் பெண்களாகவும் உள்ளனர். 6 வயதுக்கு கீழுள்ளவர்களாக 14,568 சிறுவர்கள் இங்கு வாழ்கின்றனர்.

மொழிகள்

தொகு

ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய மொழியான அசுரி மொழி உள்ளிட்ட மொழிகளை 17000 நபர்கள் பேசுகின்றனர்[1]. இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த வட இந்திய மொழியான போச்புரி மொழியை 40 000 000 நபர்கள் பேசுகின்றனர்[2]. தேவநாகரி மற்றும் கைத்தி எழுத்துகள் இரண்டையும் இவர்கள் எழுதினர். வட்டாரத்தின் மையப்பகுதியில் கிசுகோ பசார் என்ற ஒரு சிறிய சந்தை வணிக சேவையை வழங்குகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Asuri: A language of India". Ethnologue: Languages of the World (16th). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 
  2. "Bhojpuri: A language of India". Ethnologue: Languages of the World (16th). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-30. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசுகோ_வட்டாரம்&oldid=2176042" இலிருந்து மீள்விக்கப்பட்டது