கிடாமுட்டு

கிடாமுட்டு அல்லது "கிடா சண்டை" என்பது இரண்டு கிடாக்கள் (ஆடுகள்) சண்டையிடும் போட்டியாகும். இது சேவற் சண்டையைப் போன்றே மிகச் சிறப்பு வாய்ந்த போட்டியாகத் தென் தமிழ் நாட்டின் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது. ஆட்டுக் கிடாக்களின் வயதுக்கு ஒப்ப போட்டியில் எதிரி ஆடு சேர்க்கப்படும். 75 முட்டுக்கள் முட்டிக்கொண்ட பின்னும் ஆட்டுக்கிடாவில் ஒன்றும் தோற்கவில்லையெனில் கிடாக்கள் சமமான பலத்துடன் இருப்பதாக அறிவிப்பர்[1].

செம்புளிக் கிடா, குரும்பக் கிடா போன்றவைதான் முட்டுவதற்கு ஏற்றவை. அதேபோல் இரண்டரை வயதுடைய கிடாவை மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்தக் கிடாக்களுக்கு தினமும் பாதாம் பருப்பு, மாட்டுப்பால், நாட்டுக்கோழி முட்டை, கரும்பு, சோளம், உளுந்து, பச்சரிசி, பருத்தி விதை, கொள்ளு போன்றவை உணவாகத் தரப்படுகிறது. தினமும் ஐந்து கி.மீ நடக்க வைக்கிறார்கள். அப்போதுதான் உடம்பில் கொழுப்பு சேராதாம். பந்தயத்தில் 40 அடி, 50 அடி பின்னோக்கிப்போய் பாய்ந்து வந்து முட்டும் கிடாக்கள் தான் முதன்மையானதாக அறிவிக்கப்படும்[2].

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடாமுட்டு&oldid=3239903" இலிருந்து மீள்விக்கப்பட்டது