கிடாரி (2016 திரைப்படம்)

பிரசாத் முருகேசனின் இயக்கத்தில் 2016இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

கிடாரி (Kidaari), பிரசாத் முருகேசன் இயக்கத்தில், சசிகுமாரின் தயாரிப்பில் வெளியாகியுள்ள தமிழ் திரைப்படம்.[1] இத்திரைப்படத்தில் சசிகுமார், நிகிதா விமல் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களிலும் நெப்போலியன், சுஜா வருணி ஆகியோர் துணைப்பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எஸ். ஆர். கதிரின் ஒளிப்பதிவிலும், தர்புகா சிவாவின் இசையிலும், பிரவின் ஆண்டனியின் படத்தொகுப்பிலும் உருவாகியுள்ளது. இப்படம் 02 செப்தம்பர் 2016இல் வெளியானது.

'கிடாரி'
இயக்கம்பிரசாத் முருகேசன்
தயாரிப்புசசிகுமார்
கதைபிரசாத் முருகேசன்
இசைதர்புகா சிவா
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ். ஆர். கதிர்
படத்தொகுப்புபிரவின் ஆண்டனி
கலையகம்கம்பனி புரடக்சன்ஸ்
வெளியீடு02 செப்தம்பர் 2016
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

  • சசிகுமார் - கிடாரியாக
  • நிகிதா விமல் - செம்பா
  • சூரி
  • நெப்போலியன் - கோட்டூர் துரையாக
  • வேலா இராமமூர்த்தி - கொம்பையா பாண்டியன்
  • வசுமித்ர - கொம்பையா பாண்டியனின் மகன்
  • மு. இராம்ஸ்
  • ஓ.ஏ.கே சுந்தர்- புலிக்குத்திப் பாண்டியன்
  • இராம் - ஆனந்த் வேலங்கார்
  • ஹரீஸ் பேரதி
  • கே. என். காலை
  • தெனாலி (திண்டுக்கல் தென்றல்)
  • சுஜா வருணி - லோகநாயகி
  • சுபா மோகன்
  • நாடோடிகள் கோபால்- புலிக்குத்திப் பாண்டியனின் சகோதரர்

கதை தொகு

ஊரில் பெரிய தலக்கட்டைச்சார்ந்தவர், உள்ளூர் கொம்பையா பாண்டியன் (வேல இராமமூர்த்தி) கொம்பையா பாண்டியனின் அடியாள் கிடாரி (சசிகுமார்). கொம்பையா பாண்டியன் கழுத்தில் ஒருநாள் குத்துப்பட்டுக் கிடக்கிறார். உயிருக்குப் போராடும் அவரைக் குத்தியது யார்? என்னும் திருப்பத்தோடு கதை தொடங்குகிறது. ஒவ்வொரு கதைப்பாத்திரத்தின் மேலும் ஐயம் எழுகின்றது. கொம்பையா பாண்டியன் குத்தியவனை கிடாரி கண்டுபிடித்தாரா? இல்லையா என்பதே படத்தின் கதை.[2][3]

படப்பணிகள் தொகு

பிரசாத் முருகேசன் இயக்கும் இப்படத்தின் படப்பணிகளை சசிக்குமார் மார்ச்சு 2016 இல் சென்னையில் தொடங்கினார்.[4] இப்படத்தின் தலைப்பினை இயக்குநர் சமுத்திர்கனியிடம் இருந்து சசிகுமார் பெற்றார்.[5] இப்படத்தின் படப்பிடிப்பு மே 2016இல் 62 நாட்கள் படப்பிடிப்புடன் நிறைவடைந்ததாகவும், படம் இறுதிக்கட்டத்திற்கு சென்றுள்ளதாகவும் இப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்தார்[6][7]

இசை தொகு

இத்திரைப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

சான்றுகள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடாரி_(2016_திரைப்படம்)&oldid=2704356" இருந்து மீள்விக்கப்பட்டது