கிடைக்குழு 4 தனிமங்கள்
(கிடைக்குழு 4 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிடைக்குழு 4 தனிமங்கள்(Period 4 elements) தனிம அட்டவணையில் உள்ள நான்காவது கிடை வரிசையில் உள்ள தனிமங்களை குறிக்கிறது. இந்த வரிசைகளில் தனிமங்கள் தம் அணு எண்களில் அதிகரித்தலை பொறுத்து வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. ஒரு கிடை வரிசையில் இருக்கும் ஒரு தனிமத்தை ஒத்த பண்புகளை உடைய மற்ற தனிமங்களும் அதே வரிசையில் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கிடைக்குழு 4 ல் பொட்டாசியம் K,கால்சியம் Ca ,இசுக்காண்டியம் Sc ,டைட்டானியம் Ti ,வனேடியம் V, குரோமியம் Cr ,மாங்கனீசு Mn,இரும்பு Fe ,கோபால்ட் Co ,நிக்கல் Ni ,செப்பு Cu , துத்தநாகம் Zn,காலியம் Ga,செர்மானியம் Ge ,ஆர்செனிக் As ,செலீனியம் Se , புரோமின் Br ,கிருப்டான் Kr என்று பதினெட்டு தனிமங்கள் உள்ளன. இவை அனைத்தும் s ,p மற்றும் d-வலைக்குழுவை சார்ந்த தனிமங்களாகும்.
நெடுங்குழு | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கிடைக்குழு 4 | 19 K |
20 Ca |
21 Sc |
22 Ti |
23 V |
24 Cr |
25 Mn |
26 Fe |
27 Co |
28 Ni |
29 Cu |
30 Zn |
31 Ga |
32 Ge |
33 As |
34 Se |
35 Br |
36 Kr |
தனிமங்கள்
தொகுதனிமம் வேதியியல் தொடர் எதிர்மின்னி அமைப்பு 19 K பொட்டாசியம் கார உலோகங்கள் [Ar] 4s1 20 Ca கால்சியம் காரக்கனிம மாழைகள் [Ar] 4s2 21 Sc இசுக்காண்டியம் தாண்டல் உலோகங்கள் [Ar] 3d1 4s2 22 Ti டைட்டானியம் தாண்டல் உலோகங்கள் [Ar] 3d2 4s2 23 V வனேடியம் தாண்டல் உலோகங்கள் [Ar] 3d3 4s2 24 Cr குரோமியம் தாண்டல் உலோகங்கள் [Ar] 3d5 4s1 (*) 25 Mn மாங்கனீசு தாண்டல் உலோகங்கள் [Ar] 3d5 4s2 26 Fe இரும்பு தாண்டல் உலோகங்கள் [Ar] 3d6 4s2 27 Co கோபால்ட் தாண்டல் உலோகங்கள் [Ar] 3d7 4s2 28 Ni நிக்கல் தாண்டல் உலோகங்கள் [Ar] 3d9 4s1 (*) 29 Cu செப்பு தாண்டல் உலோகங்கள் [Ar] 3d10 4s1 (*) 30 Zn துத்தநாகம் தாண்டல் உலோகங்கள் [Ar] 3d10 4s2 31 Ga காலியம் குறை மாழை [Ar] 3d10 4s2 4p1 32 Ge செர்மானியம் உலோகப்போலி [Ar] 3d10 4s2 4p2 33 As ஆர்செனிக் உலோகப்போலி [Ar] 3d10 4s2 4p3 34 Se செலீனியம் மாழையிலி [Ar] 3d10 4s2 4p4 35 Br புரோமின் உப்பீனி [Ar] 3d10 4s2 4p5 36 Kr கிருப்டான் அருமன் வாயு [Ar] 3d10 4s2 4p6