கினியா புல்
கினியா புல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids
|
வரிசை: | Poales
|
குடும்பம்: | Poaceae
|
பேரினம்: | Megathyrsus
|
இனம்: | M. maximus
|
இருசொற் பெயரீடு | |
Megathyrsus maximus (Nikolaus Joseph von Jacquin) B.K.Simon & S.W.L.Jacobs, 2003 |
கினியா புல் (Megathyrsus maximus) ஆப்பிரிக்கா, பாலஸ்தீன், ஏமன் நாடுகளைத் தாயகமாகக் கொண்ட, கால்நடைகளால் விரும்பி உண்ணக்கூடிய, பசுந்தீவனப் பயிராகும். இது விதைப்பு செய்தோ அல்லது வேர் விட்ட கரணைகள் ஊன்றியோ பயிரிடப்படுகிறது[1]. இப்புற்கள் மிகவும் தடிமனாகவும், பனிப்பொழிவைத் தாங்க முடியாததாகவும் உள்ளன[2] என்றாலும், இது வறட்சியை தாங்கி வளரக்கூடிய புல் வகையாகும்.
பயிரிடும் முறை
தொகுவடிகால் வசதியுள்ள அனைத்து நிலங்களிலும் கினியாப்புல் வளரும் என்றாலும், களிமண் பாங்கான நிலங்களிலும், தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களிலும் கினியா புல் நன்றாக வளராது[1]. கினியா புற்களை வளர்க்க ஏக்கருக்கு 20:20:60 கிலோ முறையே தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்களும், மேலுரமாக 10 கிலோ தழைச்சத்தும் இட வேண்டும். ஏக்கருக்கு விதையென்றால் ஒரு கிலோவும், வேர்க் கரணையென்றால் 20,640-ம் தேவைப்படுகிறது. விதைத்த உடன் முதல் தண்ணீர் மூன்றாம் நாளும், பின்னர் 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறையும் நீர்ப் பாய்ச்ச வேண்டும். 50 முதல் 55 நாட்களில் அறுவடை செய்யலாம்[3]. அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியில் செய்யலாம். ஒரு எக்டேர் நிலத்தில் 175 டன்கள் கினியா புல் பசுந்தீவனத்தை 5 அறுவடைகளில் பெறலாம்[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "தீவன உற்பத்தி: கினியா புல்". தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 27 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "செம்மறியாடு மற்றும் முயல்களுக்கு பயனுடைய புல் மற்றும் தீவனப்பயிர்கள்". தமிழ் வெப்துனியா.கொம். 28 பிப்ரவரி 2016. http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-107051800035_1.htm. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2016.
- ↑ த. தேவராஜ் (17 நவம்பர் 2011). "கறவை மாடு வைத்திருப்பவரே தீவனப் பயிர் வளர்க்கலாம்". தினமணி. http://www.dinamani.com/tamilnadu/article674568.ece?service=print. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2016.