கின்ஃபரா நெசவுப் பூங்கா
கேரளாவிலுள்ள நெசவுப் பூங்கா
கின்ஃபரா நெசவுப் பூங்கா (Kinfra Textile Park Taliparamba) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கண்ணூர் மாவட்டத்தின் தளிப்பறம்பா நகராட்சிக்கு அருகில் உள்ள நடுக்காணி கிராமத்தில் அமைந்துள்ளது. கேரளா தொழிற்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு ஆணையம் இந்நெசவுப் பூங்காவை நிறுவியது. நெசவுத் தொழிலுக்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் பிற தொடர்புடைய வசதிகளை வழங்குவதற்காக இப்பூங்கா நிறுவப்பட்டது.[2] நடுக்காணி நெசவுப் பூங்காவில் 50 நிறுவனங்கள் உள்ளன.[3] பொதுவான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய ஆலை, நீர் சுத்திகரிப்பு நிலையம், நெசவு மையம், வடிவமைப்பு தொழிற்சாலை, ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு போன்ற வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வகை | அரசாங்க நிறுவனம் |
---|---|
தலைமையகம் | கண்ணூர், கேரளம், இந்தியா தளிப்பறம்பா |
சேவை வழங்கும் பகுதி | 125 ஏக்கர்கள்[1] |
தொழில்துறை | Textile Park |
உரிமையாளர்கள் | கேரளா தொழிற்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு ஆணையம் , கேரள அரசு |
உள்கட்டமைப்பு & வசதிகள்
தொகு- தடையில்லா மின்சாரம்
- தண்ணிர் விநியோகம்
- நிலையான வடிவமைப்பு தொழிற்சாலை
- தொடர்பு அமைப்புகள்
- அபாயகரமான கழிவுகளை அகற்றும் அமைப்பு
- சாயமிடுதல் மற்றும் முறுக்கு ஆலை
- ஒற்றை சாளர அனுமதி அமைப்பு[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Hindu : Kerala / Kannur News : Kinfra's Textile Centre to be opened next month". www.hindu.com. Archived from the original on 31 May 2008. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
- ↑ "Textile centre at nadukani to be hub of textile production activities". தி இந்து. https://www.thehindu.com/news/national/kerala/Textile-Centre-at-Nadukani-to-be-hub-of-textile-production-activities/article16366294.ece.
- ↑ "Companies in KTC".
- ↑ "Archived copy". Archived from the original on 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 July 2014.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)