கிம் சாங் பூம் (ஆங்கில மொழி: Kim Sang-bum, 김상범) (பிறப்பு: ஜூலை 7, 1989) என்பவர் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர், வடிவழகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ் (2009),[1] டேல் ஆஃப் தி நைன் டெயில்டில் (2020) லா இசுகூல் (2021), கோஸ்ட் டாக்டர் (2022)[2] மற்றும் டேல் ஆஃப் த நைன் டெயில்ட் 1938 (2023) போன்ற தொடரிகளில் நடித்துள்ளார்.

கிம் பூம்
பிறப்புகிம் சாங் பூம்
சூலை 7, 1989 (1989-07-07) (அகவை 35)
சியோல்
தென் கொரியா
தேசியம்தென் கொரியா
பணிநடிகர்
பாடகர்
வடிவழகர்
செயற்பாட்டுக்
காலம்
2006-இன்று வரை
உயரம்1.81 m (5 அடி 11 அங்)
வலைத்தளம்
kingkongent.com/star/kbum/

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

கிம் சாங் பூம் என்பவர் ஜூலை 7, 1989 இல், தென் கொரியாவின் சியோலில் பிறந்தார். இவர் சுங்-ஆங் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் நாடகங்களில் பயின்றார்.[3]

தொழில்

தொகு

கிம் "சர்வைவல் ஸ்டார் ஆடிஷனில்" சேர்ந்தார், மேலும் நூற்றுக்கணக்கான போட்டியாளர்களில் 6வது இடத்தைப் பிடித்தார். இருப்பினும், அவர் 20 வயதிற்குட்பட்டவர் என்பதால், அவரால் போட்டியில் தொடர முடியவில்லை. இருப்பினும் இந்த நிகழ்ச்சி இவருக்கு பல வாய்ப்புகளைத் கொடுத்தது, மேலும் இவர் தொலைக்காட்சித் தொடர்களில் பல பாத்திரங்களில் நடிக்க வழிவகுத்தது. இவர் 2006 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஹை கிக்! என்ற தொடரின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இவரது முதல் ஒலித்தட்டு ஆல்பமான 'ஹோம்டவுனை' ஜூன் 20, 2012 அன்று வெளியானது. அத்துடன் இவரது முதல் தனி இசை நிகழ்ச்சியான 'கிம் பீம் ஜப்பான் லைவ் 2012', டோக்கியோவின் ஷினகாவா பிரின்ஸ் விடுதியில் நிகழ்ந்தது.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் பிப்ரவரி 2012 இல், ஜெரிபிசி தொலைக்காட்சியில் நாடகமான படம் படம் என்ற தொடரில் அவரது பாத்திரத்திற்காக பயிற்சியின் பின்னர் அவர் அனுபவித்த வியத்தகு எடை இழப்பு காரணமாக அவர் முதுமை மூட்டழற்சி வலியால் அவதிப்படுவதாக கிம்ஸின் நிறுவனம் அறிவித்தது.[4]

கிம் சக நடிகர்களான லீ மின் ஹோ மற்றும் யுங் இல்-வூ ஆகியோருடன் நெருங்கிய நண்பர் ஆவார்.[5][6]

உறவுமுறை

தொகு

இவர் நவம்பர் 1, 2013 அன்று, 'காடஸ் ஆஃப் ஃபயர்' என்ற தொடரில் இவருடன் நடித்த சக நடிகையான மூன் கியூன்-யங்குடன் டேட்டிங் செய்து கொண்டிருந்தார் என்பது தெரியவந்தது.[7] பின்னர் மே 15, 2014 அன்று, அவர்கள் தங்கள் 7 மாத நீண்ட உறவை முறித்துக் கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. இரு நடிகர்களின் நிறுவங்களும் செய்தியை உறுதிப்படுத்தின: "அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு பிரிந்துவிட்டனர், ஆனால் நல்ல நண்பர்களாகவும் ஆதரவான சக ஊழியர்களாகவும் இருக்க முடிவு செய்துள்ளனர்".[8][9]

இவர் மார்ச் 29, 2018 அன்று, நடிகை ஓ இயோன்-சியோவுடன் கிம் உறவில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.[10][11][12] இருப்பினும், சில மாத டேட்டிங்கிற்குப் பிறகு அவர்கள் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "[PHOTO] Kim Bum on set of "Boys Over Flowers"". 10Asia. 13 January 2010. Archived from the original on August 9, 2017. பார்க்கப்பட்ட நாள் August 9, 2017.
  2. Jeong, Hee-yeon (June 30, 2021). "김범, '고스트닥터' 출연 확정…정지훈(비) 첫 호흡 [공식]". Donga (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் July 1, 2021.
  3. "Kim Bum - Park Shin-hye, We're Classmates, Jeong Il-woo - Lee Tae-ran, Freshmen in 2008". Hancinema. 6 March 2008.
  4. "Kim Bum's diet gives him arthritis". Korea Joongang Daily. 13 February 2012.
  5. "Lee Min-ho, Kim Bum surprise visit Jung Il-woo fan meeting". 10Asia. 7 September 2010. Archived from the original on 9 August 2017.
  6. "Lee Min-ho, Jung Il-woo, Kim Bum renew friendship". Kpop Herald. 20 January 2015.
  7. "Moon Geun-young, Kim Bum Dating". The Korea Times. 3 November 2013.
  8. Kim Hee-eun (16 May 2014). "Moon Geun-young, Kim Beom split". Korea JoongAng Daily.
  9. "Kim Bum, Moon Geun-young Split Up After Seven Months". The Chosun Ilbo. 16 May 2014.
  10. 오연서 측, 김범과 열애 초고속 인정 "호감 갖고 알아가는 단계"(공식). Naver (in கொரியன்). enews24. 29 March 2018.
  11. "Oh Yeon-seo, Kim Beom confirm relationship". The Korea Herald. 29 March 2018.
  12. "Actress Oh Yeon-seo, actor Kim Beom 'in early blush of romance'". The Korea Times. 29 March 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_பூம்&oldid=3869967" இலிருந்து மீள்விக்கப்பட்டது