முதுமை மூட்டழற்சி

முதுமை மூட்டழற்சி [Osteoarthritis, (OA)], சிதையும் மூட்டு நோய், சிதையும் வாதம் அல்லது அத்திமூட்டுநோய் என்றழைக்கப்படுபவை மூட்டுச் [மூட்டுக்குருத்தெலும்பு (articular cartilage), அடிக்குருத்தெலும்பு (subchondral bone) ஆகியவையும் சேர்ந்த] சிதைவுகளைக் கொண்ட, இயக்க (அசைவு) முறைபிறழ்வுகளினால் ஏற்படும் நோய்தொகுதியைக் குறிக்கின்றன[1]. மூட்டு வலி, மிருதுத்தன்மை, விறைப்பு, மூட்டுப்பிடிப்பு (Joint locking), சில நேரங்களில் மூட்டு நீர்மக்கட்டு (joint effusion) ஆகியவை இந்நோய்க்கு அறிகுறிகளாகும். மரபுவழி (பரம்பரை), வளர்ச்சி, வளர்சிதைமாற்றம், விசையியல் சார்ந்தவையென பல்வேறு காரணங்கள் கசியிழைய அழிவிற்கான செயல்முறைகளைத் தொடங்கலாம். இத்தகு சிதைந்த கசியிழையம் எலும்பின் மேற்பகுதிகளை சரியாகப் பாதுகாக்காதபோது, எலும்புப் பகுதிகள் வெளிப்பட்டு சேதமடைகின்றன. வலியினால் அசைவது குறைந்து விடுவதால், எலும்புகளைச் சுற்றியுள்ள தசைகள் தொய்வடைந்து செயல்திறனை இழந்தும், மூட்டிணைப்புத் தசைநார்கள் மிகவும் தளர்வுற்றும் காணப்படலாம்[2].

முதுமை மூட்டழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புகுடும்ப மருத்துவர், முடவியல், வாதவியல்
ஐ.சி.டி.-10M15.-M19., M47.
ஐ.சி.டி.-9715
ம.இ.மெ.ம165720
நோய்களின் தரவுத்தளம்9313
மெரிசின்பிளசு000423
ஈமெடிசின்med/1682 orthoped/427 pmr/93 radio/492
பேசியண்ட் ஐ.இமுதுமை மூட்டழற்சி
ம.பா.தD010003

உடற்பயிற்சி, வாழும்முறை மாற்றங்கள், வலியகற்றிகள் ஆகியவை இணைந்த சிகிச்சை முறைகள் பொதுவாக உபயோகப்படுத்தப்படுகின்றது. வலியானது உடல் மெலிவிற்கு காரணமாகும்போது, வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த, மூட்டு மாற்றீட்டு சிகிச்சையை உபயோகப்படுத்தலாம். பொதுவாகக் காணப்படும் மூட்டழற்சி, முதுமை மூட்டழற்சியேயாகும்[2]. இந்நோயே, அமெரிக்காவில் நாள்பட்ட ஊனத்திற்கு முதன்மைக் காரணியாக விளங்குகின்றது[3],[4]. ஐக்கிய இராச்சியத்தில் எட்டு மில்லியன் மக்களும்[5], ஐக்கிய அமெரிக்காவில் 21 மில்லியன் மக்களும்[6] முதுமை மூட்டழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அறிகுறிகள் தொகு

 
மூட்டு வீக்கம் அல்லது புடைப்பு முதுமை மூட்டழற்சியில் உருவாகலாம்

இந்நோயின் பிரதானமான அறிகுறியான வலியானது ஊனத்தையும், மூட்டு விறைப்பையும் உருவாக்க வல்லது. பொதுவாக வலியானது நோய் தாக்கப்பட்ட மூட்டுகளுடன் தொடர்புடைய தசைகளிலும், தசைநாண்களிலும் கூர்மையான வேதனையைத் தரக்கூடியதாகவும், தீப்புண் போன்ற எரிச்சல் தரக்கூடியதாகவும் உள்ளதாக விவரிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட எலும்புப் பிணைப்பானது அசையும்போதோ, தொடும்போதோ சொடுக்கு (crepitus) போடுவது போன்ற படபடவென்ற சத்தத்தினை உருவாக்கக் கூடியது. நோயாளிகள் தசைப்பிடிப்பு, வலியேற்படுத்தும் தசைநாண்களின் சுருக்கம் ஆகியவற்றை அனுபவிக்க நேரிடலாம். எப்போதாகிலும், மூட்டுகள் மூட்டுறை திரவங்களினால் நிரப்பப்படலாம். ஈரத்தன்மைமிக்க, குளிரான பருவகாலங்களில் பல நோயாளிகளின் வலி மிகுந்துக் காணப்படும்[7][8].

 
படுமோசமாக நோய்வாய்ப்பட்ட பெண் பன்றியின் பாதிக்கப்பட்ட கசியிழைய மாதிரி அ) சிதைக்கப்பட்ட (அரித்த) கசியிழையம்; ஆ) புண்ணான கசியிழையம்; இ) கசியிழைய மீப்பேறு; ஈ) அத்திமுளை (எலும்பு துருத்தம்) உருவாதல்

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் osteoarthritis
  2. 2.0 2.1 Conaghan, Phillip. "Osteoarthritis — National clinical guideline for care and management in adults" (PDF). http://www.nice.org.uk/nicemedia/pdf/CG059FullGuideline.pdf. பார்த்த நாள்: 2008-04-29. 
  3. Centers for Disease Control and Prevention (CDC) (February 2001). "Prevalence of disabilities and associated health conditions among adults—United States, 1999". MMWR Morb Mortal Wkly Rep. 50 (7): 120–5. பப்மெட்:11393491. 
  4. Division of PM&R, VA Boston Healthcare System-JP Campus, 150 S Huntington Ave, Boston, MA 02130, USA. (2012). "Epidemiology of Osteoarthritis and Associated Comorbidities". Physical Medicine and Rehabilitation 4 (5 Suppl): S10-9. பப்மெட்:22632687. 
  5. "Osteoarthritis (OA)". http://www.arthritisresearchuk.org/arthritis-information/conditions/osteoarthritis.aspx. பார்த்த நாள்: 2012-12-01. 
  6. [http://www.nih.gov/news/pr/may98/niams-05.htm "Arthritis Prevalence Rising as Baby Boomers Grow Older Osteoarthritis Second Only to Chronic Heart Disease in Worksite Disability"]. http://www.nih.gov/news/pr/may98/niams-05.htm. பார்த்த நாள்: 2012-12-01. 
  7. McAlindon T., Formica M., Schmid C.H., Fletcher J. (2007). "Changes in barometric pressure and ambient temperature influence osteoarthritis pain". The American Journal of Medicine 120 (5): 429–434. doi:10.1016/j.amjmed.2006.07.036. பப்மெட்:17466654. http://eclips.consult.com/eclips/article/Medicine/S0084-3873(08)79099-0. பார்த்த நாள்: 2012-12-02. 
  8. MedlinePlus Encyclopedia Osteoarthritis

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுமை_மூட்டழற்சி&oldid=3576134" இருந்து மீள்விக்கப்பட்டது