கிம் ஸ்டால்வூட்

கிம் டபிள்யூ. ஸ்டால்வூட் (ஆங்கிலம்: Kim W. Stallwood) (பிறப்பு: 1955)[1] ஒரு பிரித்தானிய விலங்குரிமை அறிஞரும், செயற்பாட்டாளரும்,[2] எழுத்தாளரும், ஆலோசகரும் ஆவார்.[3] அவர் "விலங்குகள் மற்றும் சமூக நிறுவனம்" (Animals and Society Institute) எனப்படும் விலங்குரிமை சிந்தனைக் குழுவின் ஐரோப்பிய இயக்குனர் ஆவார். அவர் 1993 முதல் 2002 வரை தி அனிமல்ஸ் அஜெண்டா என்ற விலங்குரிமை இதழின் நிர்வாக ஆசிரியராக இருந்தவர். மேலும், ஸ்பீக்கிங் அவுட் பார் அனிமல்ஸ் (2001) மற்றும் எ ப்ரைமர் ஆன் அனிமல் ரைட்ஸ் (2002) ஆகிய நூல்களின் தொகுப்பாசிரியரும் ஆவார்.[4] ஸ்டால்வூட் க்ரம்பி வீகன் என்ற பெயரில் வலைப்பதிவு செய்து வருகிறார்.[5]

கிம் ஸ்டால்வூட்
தேசியம்பிரித்தானிய
அமைப்பு(கள்)விலங்குகள் மற்றும் சமூக நிறுவனம் (Animals and Society Institute)
அறியப்படுவதுவிலங்குரிமை செயற்பாடுகள்
வலைத்தளம்
www.kimstallwood.com
grumpyvegan.com

வாழ்க்கைக் குறிப்பும் படைப்புகளும் தொகு

ஸ்டால்வூட் இங்கிலாந்தின் சர்ரே மாகாணத்திலுள்ள கேம்பர்லி நகரில் பிறந்து வளர்ந்தார்.[6]

ஸ்டால்வூட் பீட்டா அமைப்பின் முன்னாள் தேசியத் தலைவராகவும் (1987–1992), உடற்கூறாய்வு ஒழிப்பு பிரித்தானிய ஒன்றியத்தின் (British Union for the Abolition of Vivisection) பிரச்சார அதிகாரியாகவும் (1981–1985), உலக விவசாயத்தில் இரக்கம் (Compassion in World Farming) அமைப்பின் தேசிய அமைப்பாளராகவும் (1976–1978) இருந்தவர். பின்னதற்கு இன்றளவில் அவர் ஆலோசகராக இருக்கிறார்.[4]

ஸ்டால்வூட் விலங்குரிமை குறித்த உலகின் மிகப்பெரிய நூலகமான விலங்குரிமை வலையமைப்பின் (Animal Rights Network [ARN]) நிறுவனர் ஆவார். பின்னாளில் இதுவே "விலங்குகள் மற்றும் சமூக நிறுவனம்" என்று மாறியது.[7]

2013-ம் ஆண்டில், ஸ்டால்வூட் தனது முதல் புத்தகமான க்ரோல்: லைஃப் லெசன்ஸ், ஹார்ட் ட்ரூத்ஸ், அண்ட் போல்ட் ஸ்ட்ராடஜீஸ் ஃப்ரம் ஆன் அனிமல் அட்வகேட் என்ற நூலைப் லான்டர்ன் புக்ஸ் பதிப்பகத்தாரோடு சேர்ந்து பதிப்பித்தார். இந்நூலுக்கு பிரையன் மே முன்னுரை எழுதியுள்ளார்.[8][9]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள் தரவுகள் தொகு

  1. Stallwood, Kim (2014-05-14). Growl: Life Lessons, Hard Truths, and Bold Strategies from an Animal Advocate. Lantern Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781590563977. https://books.google.com/books?id=OLzBAwAAQBAJ&pg=PT19. "I was born in 1955, in Camberley, a small town in the county of Surrey, about thirty miles southwest of London, England." 
  2. "Animal-rights activist addresses beach group", The Virginia-Pilot, October 29, 1995.
  3. John Sorenson, தொகுப்பாசிரியர். "Contributor biographies". Critical Animal Studies: Thinking the Unthinkable. Toronto: Canadian Scholars' Press Inc.. பக். 333–7. 
  4. 4.0 4.1 Kim Stallwood பரணிடப்பட்டது 2011-07-14 at the வந்தவழி இயந்திரம், kinstallwood.com, accessed July 1, 2010.
  5. Stallwood, Kim. "Biography". Grumpy Vegan. பார்க்கப்பட்ட நாள் 30 July 2018.
  6. Stallwood, Kim. Interview with Caryn Hartglass. Kim Stallwood, Growl: Life Lessons, Hard Truths, and Bold Strategies from an Animal Advocate. 2014-11-11. "Camberley is the name of the town where I was born and raised."
  7. "About the authors," Terrorists or Freedom Fighters?, Lantern, 2004, pp. 389–390.
  8. Norm Phelps (2015). "Review: Growl: Life Lessons, Hard Truths, and Bold Strategies from an Animal Advocate by Kim Stallwood". Journal for Critical Animal Studies 13 (1): 151–61. http://www.journalforcriticalanimalstudies.org/wp-content/uploads/2015/12/JCAS_13_1_FINAL.pdf. 
  9. Lymbery, Philip (2015). "Book Review: Growl by Kim Stallwood". Compassion in World Farming. பார்க்கப்பட்ட நாள் 30 July 2018.

மேலும் படிக்க தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_ஸ்டால்வூட்&oldid=3924834" இலிருந்து மீள்விக்கப்பட்டது