கியாய்க்டியோ புத்தர் கோயில்
கியாய்க்டியோ பகொடா அல்லது கியாய்க்டியோ புத்தர் கோயில் ( Kyaiktiyo Pagoda), தங்கப் பாறை என்றும் அழைக்கப்படுகிறது. இது மியான்மர் நாட்டில், மொன் மாநிலத்தில் அமைந்த சிறு புத்தர் கோயில். ரங்கூனிலிருந்து 210 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. இப்பாறைக் கோயில் கடல் மட்டத்துக்கு மேல் 3600அடி உயரத்தில் (1100 மீட்டர்) அமைந்துள்ளது. இப்பாறையின் உயரம் 7.3மீட்டர். கின்புன் என்ற கிராமத்திலிருந்து 16 கி. மீ., தொலைவில் தங்கப் பாறை அமைந்துள்ளது. ஆண்கள் மட்டும் இக்கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு சிறிய இரும்புப் பாலத்தைக் கடந்தே இந்தப் பாறையை அடைய முடியும். மார்ச் மாதத்தில் வரும் பெüர்ணமி அன்று சீனா, ஜப்பான், மலேசியா, கொரியா போன்ற நாடுகளில் வசிக்கும் புத்த சமயத்தினர் இந்த தங்கப் பாறையை வழிபட வருகின்றனர். இப்பாறையின் அடியில் புத்தரின் தலைமுடி புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.[1]
கியாய்க்டியோ பகொடா தங்கப் பாறை | |
---|---|
தங்கப் பாறையின் மீது கியாய்க்டியோ பகொடா | |
தகவல்கள் | |
மதப்பிரிவு | தேரவாத பௌத்தம் |
நாடு | மியான்மர் |
ஆள்கூறுகள் | 17°29′00.90″N 97°05′54.34″E / 17.4835833°N 97.0984278°E |
காட்சிகள்
தொகுபடக்காட்சியகம்
தொகு-
தங்கப் பாறையை வழிபடும் ஆண்கள்
-
கியாய்க்டியோ மலை அடிவார கிராமம் கின்புங்
-
கியாய்க்டியோ மலைக் கோயில் சாலை
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-01-07. பார்க்கப்பட்ட நாள் 2015-04-18.