இத்தாலிய மறுமலர்ச்சி இயக்கத்துக்குப் பின்னர் உருவான கலை இயக்கங்களுள் மிக முக்கியமானதும், செல்வாக்கு மிக்கதுமான கலை இயக்கம் கியூபிசம் (Cubism) என்று சொல்லலாம். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவில், ஓவியம் மற்றும் சிற்பக்கலைத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியது கியூபிசமேயாகும்.[1][2]

கிட்டாருடன் ஒரு பெண் ஜொர்ஜெஸ் பிராக் (Georges Braque), 1913
பிராக்கிலுள்ள (Prague) கியூபிசப் பாணி வீடு.

கியூபிசக் கலை ஆக்கங்களில், பொருட்கள் துண்டுதுண்டாகப் பகுத்தாராயப்பட்டு abstract[தெளிவுபடுத்துக] வடிவில் மீளுருவாக்கம் செய்யப்படுகின்றன. பொருட்களை ஒரு கோணத்தில் பார்த்துக் கலைப் படைப்புக்களில் அவற்றின் ஒரு பகுதியை மட்டும் வெளிப்படுத்துவதற்கு மாறாக, ஒரே சமயத்தில் பொருட்களின் பல கோணப் பார்வைகளை வெளிப்படுத்திப் பொருட்களை முழுமையாகக் காட்டும் முயற்சியே கியூபிசத்தின் அடிப்படை எனலாம். பொதுவாக கியூபிசப் படைப்புக்களில் தளப்பரப்புகள் ஒன்றையொன்று பல்வேறு கோணங்களில் வெட்டுகின்ற தோற்றத்தைக் காணமுடியும். பொருட்களினதும், அவற்றின் பின்னணிகளினதும் தளங்கள் ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவி அதிக ஆழம் காட்டாத பொருள்மயங்கு நிலையை உருவாக்குவதே கியூபிசத்தின் சிறப்பியல்பு ஆகும்.

வரலாறு

தொகு

பிரான்சின் தலைநகரான பாரிஸில் மொண்ட்மாட்ரே வட்டாரத்தில் வாழ்ந்த ஜோர்ஜெஸ் பிராக்கும், பாப்லோ பிக்காசோவும் 1908 ஆம் ஆண்டில் கியூபிசத்தின் வளர்ச்சியை நோக்கிப் பணியாற்றி வந்தனர். 1907 இல் ஒருவரையொருவர் சந்தித்த அவர்கள் 1914 இல் முதலாவது உலக யுத்தம் வெடிக்கும்வரை மிக நெருக்கமாக இணைந்து வேலை செய்து வந்தனர்.

பிரான்சியக் கலை விமர்சகரான லூயிஸ் வௌக்ஸ்செல்ஸ் (Louis Vauxcelles) என்பார் 1908 ஆம் ஆண்டு முதன் முதலாக கியூபிசம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். பிராக் வரைந்த ஓவியமொன்றைப் பார்த்த அவர், அதனை, சிறிய கனக் குற்றிகளினால் நிறைந்துள்ளது என்னும் பொருள்பட 'full of little cubes' என வர்ணித்தார். தொடர்ந்து இவ்வகை ஓவியங்களைக் குறிக்கக் கியூபிசம் என்ற சொல் பரவலாக வழங்கி வந்தது. எனினும் இந்த ஓவியப் பாணியை அறிமுகப் படுத்திய பிராக்கும், பிக்காசோவும் இச்சொல்லைப் பயன்படுத்துவதை நீண்ட காலமாகத் தவிர்த்தே வந்தனர்.

மொண்ட்பார்னசேயில் கூடிய கலைஞர்களில் கூட்டத்தினால் கியூபிச இயக்கம் விரிவடைந்தது. ஹென்றி கான்வெய்லெர் (Henry Kahnweiler) என்னும் கலைப்பொருள் விற்பனையாளரும் கியூபிச இயக்கத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தார். இது வெகுவிரைவாகச் செல்வாக்குள்ள ஒரு இயக்கமாகியது. 1910 ஆம் ஆண்டிலேயே, பிராக்கினதும், பிக்காசோவினதும் செல்வாக்குக்கு ஆட்பட்ட கலைஞர்களைக் கொண்ட "கியூபிசக் குழுமம்" (cubist school) பற்றி விமர்சகர்கள் குறிப்பிடத் தொடங்கினார்கள். தங்களைக் கியூபிச ஓவியர்கள் என்று கூறிக்கொண்ட பலர், பிராக், பிக்காசோ ஆகியோரின் பாதையிலிருந்து வேறுபட்ட திசையில் சென்று தங்கள் படைப்புக்களை ஆக்கத் தொடங்கினர். 1920க்கு முன்னர், பிராக், பிக்காசோ ஆகியோரின் ஆக்கங்கள்கூடப் பல்வேறு வேறுபாடான கட்டங்களினூடாகச் சென்றிருந்தது.

புகழ்பெற்ற கியூபிசக் கலைஞர்

தொகு
 
வியன்னாவிலுள்ள வொட்ரூபா தேவாலயம்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூபிசம்&oldid=3265350" இலிருந்து மீள்விக்கப்பட்டது