கியூரி (Curie) (குறியீடு Ci) என்பது கதிரியக்கச் சிதைவில் நொடிக்கு எத்தனை சிதைவுகள் ஏற்படுகின்றன என்னும் அளவைக் குறிக்கும் அலகு. இது அனைத்துலக முறை அலகுகள் அல்லாத மெட்ரிக்கு அலகு. இவ்வலகு நோபல் பரிசாளர்கள் மேரி கியூரி, பியர் கியூரி ஆகியோரைப் பெருமைப்படுத்து முகமாக சூட்டப்பட்டது[1][2] இதனைக் கீழ்க்காணுமாறு வரையறுக்கிறார்கள்:

1 Ci = 3.7 × 1010 கதிரியக்கச் சிதைவுகள் ஒரு நொடிக்கு.

இவ்வலகின் தொடர்ந்த பயன்பாட்டை இப்பொழுது ஊக்குவிப்பதில்லை[3]

ஒரு கியூரி என்பது ஏறத்தாழ ஒரு கிராம் இரேடியம் ஓரிடத்தான் (ஐசோடோப்பு) 226Ra என்பதின் கதிரியக்கச் செயற்பாடு ஆகும்.

கதிரியக்கச் செயற்பாட்டுக்கு அனைத்துலக முறை அலகுகள் வழி வந்த அலகு பேக்குரெல் (குறியீடு: Bq) ஆகும். ஒரு கியூரி என்பது 37 கிகா பேக்குரெல் ஆகும், அதாவது:

1 Ci = 3.7 × 1010 Bq = 37 GBq

அதே போல ஒரு பேக்குரெல் என்பது,

1 Bq ≅ 2.703 × 10−11 Ci ஆகும்.

கதிரியக்கத்தைக் குறிக்கப் பயன்படும் மற்றொரு அலகு மைக்குரோ கியூரி (microcurie):

1 μCi = 3.7 × 104 சிதைவுகள் ஒரு நொடிக்கு = 2.22 × 106 சிதைவுகள் ஒரு மணித்துளிக்கு

ஒரு கதிரியக்க மருத்துவமுறை இயந்திரம் ஏறத்தாழ 1000 Ci அளவு கதிரியக்கத்தை சீசியம்-137 அல்லது கோபால்ட்டு-60 போன்ற கதிரியக்க ஓரிடத்தான்களில் இருந்து வெளியிடும். இந்த அளவு கதிரியக்கச் செயற்பாடு ஒருசில மணித்துளிகளிலேயே உடலுக்கு மிகவும் தீங்கு தரும் அளவாகும்.

சராசரியான ஒரு மாந்த உடலில் ஏறத்தாழ 0.1 μCi அளவு இயற்கையான பொட்டாசியம்-40 கதிரியக்கச் செயற்பாடு நிகழும்.

மொத்த அளவு கதிரியக்கத்தைக் குறிக்க கியூரி

தொகு

கியூரிகள் சில நேரங்களில் ஒரு நொடிக்கு ஏற்படும் கதிரியக்கச் சிதைவுகளைக் குறிப்பதற்கு மாறாக கதிரியக்கப் பொருளின் அளைவைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர், எடுத்துக்காட்டாக சீசியம்-137 1 Ci. இப்படிச் சொல்லும் பொழுது 1 Ci கதிரியக்கம் உருவாக்கத் தேவைப்படும் அணுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் கதிரியக்கச் சிதைவு வீதத்தைக் கொன்டு இந்த அணுக்களின் எண்ணைக் கணக்கிடலாம்:

N (அணுக்கள்) * λ (s-1) = 1 Ci = 3.7 × 1010 (Bq)

ஆகவே,

N = 3.7 × 1010 / λ

இதில் λ என்பது அடுக்கேற்ற முறையில் உள்ள படி அல்லது மேலெண் சிதைவைக் குறிக்கும் (s−1).

இவற்றையும் பார்க்கவும்

தொகு

துணைநூல்கள்

தொகு
  1. curie - Britannica Online Encyclopedia
  2. Paul W. Frame. "How the Curie Came to Be". பார்க்கப்பட்ட நாள் 2008-04-30.
  3. Nist Special Publication 811, paragraph 5.2.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூரி&oldid=2745512" இலிருந்து மீள்விக்கப்பட்டது