கியூரியம்(IV) புளோரைடு
வேதிச் சேர்மம்
கியூரியம்(IV) புளோரைடு (Curium(IV) fluoride) CmF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். கியூரியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கியூரியம் டெட்ராபுளோரைடு
| |
வேறு பெயர்கள்
கியூரியம்(IV) புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
24311-95-3 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
CmF4 | |
வாய்ப்பாட்டு எடை | 322.99 g·mol−1 |
தோற்றம் | பழுப்புநிறத் திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுகியூரியம்(III) புளோரைடு சேர்மத்துடன் தனிமநிலை புளோரினை 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் புளோரினேற்றம் செய்து கியூரியம்(IV) புளோரைடு தயாரிக்கப்படுகிறது.[4]
- 2CmF3 + F2 → 2CmF4
இயற்பியல் பண்புகள்
தொகுகியூரியம்(IV) புளோரைடு சேர்மமானது Cm4+ மற்றும் F− அயனிகளால் ஆனதாகும். பழுப்பு நிறத்தில் ஒரு திண்மநிலைப் பொருளாக இது உருவாகிறது. C2/c (எண். 15) என்ற இடக்குழுவும் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பையும் இது கொண்டுள்ளது. மேலும் a = 1250 பைக்கோமீட்டர், b = 1049 பைக்கோமீட்டர் மற்றும் c = 818 பைக்கோமீட்டர் என்ற அளவுகள் இதன் அணிக்கோவை அளவுருக்களாக உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3046. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 27 June 2023.
- ↑ Gutmann, Viktor (2 December 2012). Halogen Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 318. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-14847-4. பார்க்கப்பட்ட நாள் 27 June 2023.
- ↑ Kistemaker, P. G.; Nibbering, N. M. M. (2 December 2012). Advances in Mass Spectrometry, Volume 12 (in ஆங்கிலம்). Elsevier. p. 741. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-59945-2. பார்க்கப்பட்ட நாள் 27 June 2023.
- ↑ Advances in Inorganic Chemistry and Radiochemistry (in ஆங்கிலம்). Academic Press. 1960. p. 210. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-057851-4. பார்க்கப்பட்ட நாள் 27 June 2023.