கியூ. ஆர். குறி

கியூ.ஆர். குறி (விரைவு எதிர்வினை- Quick Response குறி) என்பது பட்டைக் குறியீடு வாசிப்பிகளால் (bar code readers), வருடிகளால், நுண்ணறிவு நகர்பேசிகளால் புரிந்து கொள்ளக் கூடிய குறிகள் ஆகும். இக்குறியீடு வெள்ளை நிறப்புலத்தில் கருப்பு வடிவங்களைக் கொண்டது. இங்கு குறியீட்டாக்கம் கொண்டுள்ளவை எண்கள் அல்லது எழுத்துகளாக இருக்கலாம்.[1] இதனை வருடி, வாசித்து மேலதிக தகவல்களை, அல்லது செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். ஒரு இணையத்தளத்தின் முகவரியையும் இம்முறையில் அடக்கலாம்.

இப்பக்கத்திற்கான இணைய முகவரியின் கியூ.ஆர் குறி.

கியூ.ஆர். என்பது விரைவு எதிர்வினை (Quick Response) என்பதன் ஆங்கிலச் சுருக்கமாகும், இது உயர் வேகத்தில் குறிநீக்கம் (decode) செய்யப் பயன்படுவதால்[2] இதனை உருவாக்கியவர்களால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. ஜப்பானில் டொயோட்டா மற்றும் டென்சோ நிறுவனங்களால்1994 இல் உருவாக்கப்பட்டது.<refDavis, Phillip (21 September 2011). "How to Reach Your Mobile Customer Using QR Codes". SocialMediaToday.com. 8 ஆகஸ்ட் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 September 2011 அன்று பார்க்கப்பட்டது.</ref> இது இருபரிமாண பட்டைக் குறியீட்டு முறையில் புகழ்பெற்ற ஒன்றாகும்.[2]

சப்பானில் இத்தொழில்நுட்பம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஐக்கிய இராச்சியம் தேசிய அளவில் இக்குறியீடைப் பயன்படுத்தும் ஏழாவது பெரிய நாடாகும்.[3]

ஆரம்பகாலத்தில் வாகன உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட இந்தக் குறியானது தற்போது பரவலாக வேறு தேவைகளுக்கும் பயன்படுகிறது. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட நபரது தொடர்பு விபரத்தை இம்முறைமூலம் நகர்பேசியில் உள்ளடக்கி வைத்திருந்து தேவைப்படும் பட்சத்தில் வேறொருவருடன் பரிமாறிக்கொள்ளலாம் அல்லது இணையதள முகவரிகள், குறுந்தகவல், மின்னஞ்சல் போன்றவற்றையும் இம்முறைமூலம் உள்ளடக்கலாம். ஒருவர் தனது தொடர்பு விபரங்களை இந்த QR குறியைப் பயன்படுத்தி உருவாக்கி, பின்னர் அச்சிட்டு ஆளறி அட்டையாக (visiting card) உபயோகப்படுத்தலாம்.

இலவசமான குறியீட்டாக்கம் அல்லது குறிநீக்கம் செய்யும் இணையதளங்கள், சில புகைப்படக் கருவிகள் கொண்ட நகர்பேசிகள் இவற்றை உருவாக்கவும் குறிநீக்கம்செய்யவும் வசதிகள் உடையன, கூகிளின் ஆண்ட்ராய்டு நகர்பேசிகளில் இயல்பாகவே காணப்படும் பட்டைக் குறியீடு வாசிப்பி மூலம் கியூ.ஆர் குறியைப் பயன்படுத்தலாம்.

மேற்கோள்கள்தொகு

  1. "QR Code features". Denso-Wave. 03-10-2011 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  2. 2.0 2.1 "QR Code – About 2D Code". Denso-Wave. 03-11-2011 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  3. name=Why isn't everyone using QR codes?>Williams, Oliver (2011-03-08). "Why isn't everyone using QR codes?". iMediaConnection.com. 2016-01-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-08-17 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூ._ஆர்._குறி&oldid=3576948" இருந்து மீள்விக்கப்பட்டது