கிரண் சேத்தி

கிரண் சேத்தி (Kiran Sethi) இந்தியாவின் தில்லியின் காவல்துறை அதிகாரி ஆவார். இவர் இந்தியா முழுவதும் பெண்கள் தற்காப்பு மற்றும் காவல் சேவைகள் பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்ததற்காக அறியப்பட்டவர். இதற்காக இவர் 2015-ல் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் கௌரவிக்கப்பட்டார்.[1]

கிரண் சேத்தி

வாழ்க்கை

தொகு

கிரண் சேத்தியின் குடும்பம் தில்லியில் வசித்து வருகிறது. இவர் 1987-ல் காவல்துறையில் சேருவதற்கு முன்பு இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தில் இதழியல் பயின்றார்.[2] இவர் காவல்துறை ஆய்வாளராகப் பதவி வகித்தார். மேலும் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை அடிக்கடி விசாரித்து வருகிறார்.[2] 2015ஆம் ஆண்டளவில் 5000க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த தற்காப்புப் பாடமான 'பிரஹார்' பயிற்சியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார்.[2][3] 200க்கும் மேற்பட்ட செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்குத் தற்காப்பு பயிற்சி அளித்துள்ளார்.[4] பள்ளி மாணவர்களுக்காக மிகப்பெரிய அளவில் தற்காப்பு பயிற்சியினை ஏற்பாடு செய்ததன் விளைவாக லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இவரது பெயர் இடம்பிடித்தது.[5] 2014ஆம் ஆண்டில், பணியில் இல்லாதபோது, குடிபோதையில் ஒருவரால் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்ட பார்வையற்ற சிறுமியை சேத்தி காப்பாற்றினார்.[6][7][8][9]

தற்காப்பு கலை சாதனைகள்

தொகு
  • கறுப்பு பட்டை, 1999, உலக கராத்தே அமைப்பிலிருந்து[8]
  • 2000ஆம் ஆண்டு டேக்வாண்டோ கூட்டமைப்பு, இந்தியா, தேசிய போட்டியில் வெற்றி
  • 2006ல் 15வது உலகக் கோப்பையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்

மேற்கோள்கள்

தொகு
  1. "Kiran Sethi felicitated on international women's day - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2018-12-09.
  2. 2.0 2.1 2.2 "Karate cop helps survivors hit back". 9 March 2015. https://www.pressreader.com/india/the-times-of-india-new-delhi-edition/20150309/281590944032671. பார்த்த நாள்: 9 December 2018. "Karate cop helps survivors hit back". The Times of India. 9 March 2015. Retrieved 9 December 2018.
  3. "Self-Defence Training". Delhi State Legal Services Authority. 2018. பார்க்கப்பட்ட நாள் 9 December 2018.
  4. Singh, Abhay (27 December 2017). "Lady Singham teaches 200 differently-abled girls self-defence lessons". Millennium Post. பார்க்கப்பட்ட நாள் 2018-12-09.
  5. "Largest Self-Defence Demonstration". Coca-Cola in India. பார்க்கப்பட்ட நாள் 9 December 2018.
  6. "Woman cop saves visually challenged girl from drunk goon". 2014-02-21. https://www.thehindu.com/news/cities/Delhi/woman-cop-saves-visually-challenged-girl-from-drunk-goon/article5710704.ece. பார்த்த நாள்: 2018-12-09. 
  7. "Delhi: Woman ASI Saves Blind Girl From Being Kidnapped". 20 February 2014. https://www.outlookindia.com/newswire/story/delhi-woman-asi-saves-blind-girl-from-being-kidnapped/829838. பார்த்த நாள்: 9 December 2018. 
  8. 8.0 8.1 "Woman police officer foils bid to kidnap girl; man held". 21 February 2014. https://indianexpress.com/article/cities/delhi/woman-police-officer-foils-bid-to-kidnap-girl-man-held/. பார்த்த நாள்: 9 December 2018. 
  9. "Alert woman cop saves blind girl from abduction". 20 February 2014. https://www.business-standard.com/article/news-ians/alert-woman-cop-saves-blind-girl-from-abduction-national-114022001175_1.html. பார்த்த நாள்: 9 December 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்_சேத்தி&oldid=3672134" இலிருந்து மீள்விக்கப்பட்டது