கிராசுமேனைட்டு

பைராக்சென் குழு கனிமம்

கிராசுமேனைட்டு (Grossmanite) என்பது CaTi3+AlSiO6 [1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கிராசுமேனைட்டு கனிமம் பைராக்சென் குழு கனிமங்களில் மிகவும் அரிதாகக் கிடைக்கும் கனிமம் என்றும்[2] இக்குழுவைச் சேர்ந்த கனிமங்களில் தைட்டானியம் மிகுந்து காணப்படும் உறுப்பினர் என்றும் கருதப்படுகிறது. டிசுடாரைட்டுடன் (Ti2O3) மூவிணைதிறன் தைட்டானியம் கொண்ட ஒரு தனித்துவமிக்க கனிமமாக கிராசுமேனைட்டு கருதப்படுகிறது[3]. கனிமங்களில் காணப்படும் தைட்டானியம் பொதுவாக பிரத்தியேகமாக நான்கிணைதிறன் கொண்டே அமைந்திருக்கும். தாவிசைட்டு, எசெனைட்டு, குசிரோயிட்டு போன்ற பிற பைராக்சென் குழு கனிமங்களில் கிராசுமேனைட்டு மட்டுமே தைட்டானியம் வரிசையொத்த கனிமமாக உள்ளது. கிராசுமேனைட்டு, டிசுடாரைட்டு இரண்டுமே பிரபலமான ஆலென்டெ என்ற விண்விழ்கல்லில் இருந்து பெறப்பட்டவையாகும்[2].

கிராசுமோனைட்டு
Grossmanite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுCaTi3+AlSiO6

மேற்கோள்கள்

தொகு
  1. Ma, C., and Rossmann, G.R., 2009: Grossmanite, CaTi3+AlSiO6, a new pyroxene from the Allende meteorite. American Mineralogist 94(10), 1491-1494
  2. 2.0 2.1 Mindat, Grossmanite, http://www.mindat.org/min-39426.html
  3. Mindat, Tistarite, http://www.mindat.org/min-38695.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராசுமேனைட்டு&oldid=3938009" இலிருந்து மீள்விக்கப்பட்டது