கிராந்தலைட்டு
கால்சியம் அலுமினியம் காரம் பாசுப்பேட்டு கனிமம்
கிராந்தலைட்டு (Crandallite) என்பது CaAl3(PO4)2(OH)5·H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கால்சியம் அலுமினியம் கார பாசுப்பேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. நைட் சிண்டிகேட்டு நிறுவனத்தில் பணியாற்றிய மிலன் எல். கிராந்தால் சூனியர் என்பவரின் நினைவாக கனிமத்திற்கு கிராந்தலைட்டு என்று பெயரிடப்பட்டது. இந்த கனிமம் லேட்டரைட்டு மற்றும் பாசுபேட்டு நிறைந்த பெக்மாடைட்டு பாறைகளின் மாற்றத்தால் உருவாகிறது.
கிராந்தலைட்டு Crandallite | |
---|---|
வாரிசைட்டும் கிராந்தலைட்டும், அமெரிக்காவில் கிடைத்தது அளவு: 7.8 × 7.3 × 0.4 செ.மீ. | |
பொதுவானாவை | |
வகை | பாசுப்பேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | CaAl 3(PO 4) 2(OH) 5·H 2O |
இனங்காணல் | |
மோலார் நிறை | 414.02 |
படிக இயல்பு | இழைத்தன்மை, கச்சிதம் அல்லது திரட்சி |
படிக அமைப்பு | முக்கோணம் |
பிளப்பு | சரிபிளவு |
மோவின் அளவுகோல் வலிமை | 4 |
மிளிர்வு | மங்கலான பளபளப்பு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
அடர்த்தி | 2.84 |
ஒளிவிலகல் எண் | w = 1.618, e = 1.623 |
இரட்டை ஒளிவிலகல் | 0.0050 |
மேற்கோள்கள் | [1] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் கிராந்தலைட்டு கனிமத்தை Cdl[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Crandallite Mineral Data". webmineral.com.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.