கிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டம்
தமிழ்நாடு அரசு கிராமக் கோயில்களில் பூசாரிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கி வருகிறது.
உதவி பெறுவதற்கான தகுதிகள்
தொகு- பூசாரியாகப் பணியாற்றிய கோயில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயிலாக இருக்கக் கூடாது.
- கோயிலில் பூசாரியாக 20 ஆண்டுகளுக்குக் குறையாமல் பணியாற்றியிருக்க வேண்டும்.
- ஓய்வு பெறும் பூசாரியின் வயது 60க்கு மேல் இருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம்
தொகுதமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படுகின்றன. இந்த விண்ணப்பப் படிவங்களைப் பெற்று நிரப்பி தேவையான வருமானச் சான்று, மருத்துவச் சான்று போன்றவைகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரிகள் ஆய்வு
தொகுஇந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா என்று இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சரியாக இருக்கும் நிலையில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.
வழங்கப்படும் உதவி
தொகுகிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூபாய் 500 வழங்கப்படுகிறது.