கிராம உதவியாளர்

கிராம உதவியாளர் (முன்னர் தலையாரி என்று அழைப்பர்). தமிழ்நாடு அரசு அரசாணை எண்: 625, 6 சூலை 1995-ன்படி, கிராம உதவியாளர் பணியிடங்கள் தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் ஒரு கிராம உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராம நிர்வாக அலுவலரின் கீழ் கிராம உதவியாளர் செயல்படுவார்.

கிராம உதவியாளரின் பணிகள் தொகு

  • கிராமத்தின் நன்செய், புன்செய், தரிசு, புறம்போக்கு, நத்தம் நிலங்கள் மற்றும் வீடுகள், மனைகள் குறித்த புள்ளிவிவரங்கள் அறிந்து வைத்திருத்தல்.
  • கிராமத்தில் விளையும் பயிர்களின் விவரம், நிலவரி விவரம், கிராமங்களில் நடக்கும் பிறப்பு, இறப்பு, தற்கொலை, விபத்து, கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு மற்றும் கிராமத்தில் வசிப்போரின் தகவல்களை வருவாய்த் துறையின் கிராம நிர்வாக அலுவலர் போன்ற உயர் அதிகாரிகளுக்கு தேவைப்படும்போது தெரிவித்தல்.
  • முதியோர் ஓய்வூதியம், சாதி, வருவாய், இருப்பிடம், வாரிசு சான்றிதழ்களை வருவாய்த் துறை வழங்கும் முன்னர், உரியவர்களை விசாரித்தல்.
  • மேலும் கிராம ஆவணங்களை பாதுகாத்தல், விளைநிலத்தை அளத்தல், ஆக்கிரமிப்பை அகற்றுதல் போன்ற செயல்களில் உதவியாக இருத்தல்.
  • காவல் துறையினர் ஒரு கிராமத்திற்குள் நடந்த குற்றச் செயல்கள் குறித்து விசாரணைக்கு உதவியாக இருத்தல்.

குறைபாடுகள் தொகு

பல கிராம உதவியாளர்கள் கிராமங்களில் தங்கி பணிபுரியாது தாலுகா அலுவலகத்தில் பணிபுரிவதால் பொது மக்களின் சேவைக்கு இடையூறாக இருப்பதாக கருதுகின்றனர்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "கிராம உதவியாளர்கள்". Archived from the original on 2022-09-20. பார்க்கப்பட்ட நாள் 2022-09-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராம_உதவியாளர்&oldid=3725721" இலிருந்து மீள்விக்கப்பட்டது