கிரிசு மாஞ்சா

இந்தியக் கட்டடம்

கிரிசு மாஞ்சா (Girish Mancha) என்பது இந்தியாவின் மேற்கு வங்கம், கொல்கத்தா, பேக் பசாரில் அமைந்துள்ள ஓர் அரங்கமாகும்.[1] இந்த அரங்கம் 1986 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்று மேற்கு வங்க முதல்வர் சோதி பாசுவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அரங்கத்திற்கு வங்காள மொழி நாடக இயக்குநரும் நடிகருமான கிரிசு சந்திர கோசின் பெயர் சூட்டப்பட்டது. [2]

கிரிசு மாஞ்சா
Girish Mancha
கிரிசு மாஞ்சா
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைசெயல்படுகிறது
இடம்பேக்பசார்
முகவரி76/1, பேக்பசார் தெரு, கொல்கத்தா, 700003
நகரம்கொல்கத்தா
நாடுஇந்தியா
ஆள்கூற்று22°36′14.67″N 88°21′53.17″E / 22.6040750°N 88.3647694°E / 22.6040750; 88.3647694
துவக்கம்1 சூலை 1986
உரிமையாளர்மேற்கு வங்காள அரசாங்கம்

அரங்கத்தின் வடிவமைப்பு மேற்கு வங்காளத்தின் பொதுப்பணித் துறையால் செய்யப்பட்டது. அரங்கத்தின் பராமரிப்புப் பணிகளையும் அவர்களே மேற்கொள்கிறார்கள். மேலும் இந்த அரங்கம் மேற்கு வங்க அரசின் தகவல் மற்றும் கலாச்சார விவகாரங்கள் துறையின் நிர்வாக மையத்தின் கீழ் உள்ளது. பல்வேறு நாடகக் குழுக்களால் தொடர்ந்து அரங்கம் பயன்படுத்தப்படுகிறது. கிரிசு மாஞ்சா கொல்கத்தாவின் மிகவும் சுறுசுறுப்பான நாடக அரங்குகளில் ஒன்றாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. South Asian handbook. Trade & Travel Publications. https://books.google.com/books?id=Iu4uAQAAIAAJ. 
  2. "Entertainment in Kolkata". Kolkata Municipal Corporation. பார்க்கப்பட்ட நாள் 30 June 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிசு_மாஞ்சா&oldid=3775759" இலிருந்து மீள்விக்கப்பட்டது