கிரிசு ஹானி
கிரிசு ஹானி (Chris Hani) (28 சூன் 1942 – 10 ஏப்ரல் 1993) தென்னாப்பிரிக்க பொதுவுடைமைக் கட்சியின் தலைவராவார். உமகந்தோ என அழைக்கப்பட்ட தென்னாப்பிரிக்க காங்கிரசின் ஆயதப்படைப்பிரிவின் தலைவர். நிறவெறிக்கு எதிராக சமரசமின்றிப் போராடியவர். தென்னாப்பிரிக்க காங்கிரஸ் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்பியதில் இவரின் பங்கு மகத்தானது.[1]
பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை தொகு
இவரின் தந்தை தென்னாப்பிரிக்க சுரங்கத்தில் கூலித்தொழிலாளியாக வந்தவர். தாயும் ஒரு கூலித்தொழிலாளியே. 1942 ஜூன் 28 ஆம் நாள் பிறந்த மார்ட்டின் தெம்பிசையில் கிரிசு ஹானி, படிக்கின்ற காலத்தில் கத்தோலிக்க மதநம்பிக்கை மிக்க வராக-மதபோதகராகும் நோக்கோடு இருந்தார். ஆனால் கறுப்பர்களுக்கு கல்வியை மறுக்கும் சட்டம் 1959ல் வந்தது.அதன் விளைவுகள் இவரின் உள்ளத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தின.ஆப்பிரிக்க தேசிய காங்கிர சில் உறுப்பினர் ஆனார். இவரது மாமா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்.அவர் மூலம் மார்க்சியத்தை அறிந்து அதில் இணைய விரும்பினார்.அப்போது கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. அதில் சேர்ந்து தலைமறைவு கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதில் முன்னின்றார். 1961ல் அதிகாரபூர்வமாக கட்சி ஊழியரானார். கட்சி தடை செய்யப்பட்ட சூழலில் கம்யூனிஸ்ட்கள் தென்னாப்பிரிக்க காங்கிரசில் சேர்ந்து செயல்பட்டனர்.அதன் ஒரு முக்கிய பிரிவான உமகந்தோ ஆயுதப் பிரிவில் பொறுப்பேற்று செயல்பட்டார். 1963 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் தடைச் சட்டத்தின்கீழ் தனிமை தீவில் சிறைவைக்கப்பட்டார்.[2] 1990ல் கட்சி மீதான தடை நீக்கப்பட்ட பிறகு நாடு திரும்பினார். 1991ல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
கொலை தொகு
வெறுப்பையும் பகைமையையும்அனைவரும் கைவிட்டு சுதந்திரமாகவும் சம உரிமையோடும் வாழ பெருமுயற்சி செய்தார். இந்த முயற்சியை சீர் குலைக்கவே இவரை திட்டமிட்டுக் கொலைசெய்தனர். கொலைகாரர்களை கையும் களவுமாகப் பிடிக்க அவரின் அண்டை வீட்டில் வாழ்ந்த வெள்ளைப் பெண்மணியே உதவினார்.[3] கொலைகாரர்கள் கன்சர்வேட்டிவ் கட்சியோடு தொடர்புடையவர்கள் என்பது உறுதியானதால்; கலவர நோக்கம் அம்பலமாகி அந்த சதி முறியடிக்கப்பட்டது. கொலைகாரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், பின்னர் மரணதண்டனையே அந்நாட்டில் ரத்து செய்யப்பட்டதால் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.[4]
மேற்கோள்கள் தொகு
- ↑ Hani, Chris (February 1991). "My Life". South African Communist Party இம் மூலத்தில் இருந்து 2007-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070928040336/http://www.sacp.org.za/main.php?include=docs%2Fbiography%2F2006%2Fhani.html. பார்த்த நாள்: 2007-04-10.
- ↑ "Martin Thembisile (Chris) Hani". About.com இம் மூலத்தில் இருந்து 2009-05-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090519051018/http://africanhistory.about.com/library/weekly/aa-BioChrisHani-a.htm. பார்த்த நாள்: 2007-04-10.
- ↑ "Hani Truth hearing resumes". BBC News. 1998-03-16. http://news.bbc.co.uk/2/hi/africa/65954.stm.
- ↑ "வரலாற்றுச் சுவடு:கிரிஷ் ஹானியை கொன்றவர்கள் நோக்கம்...???". தீக்கதிர். 1 ஏப்ரல் 2012 இம் மூலத்தில் இருந்து 2016-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160306222140/http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=4850. பார்த்த நாள்: 24 ஏப்ரல் 2014.