கிரிஜா சுரேந்திரன்

இந்திய அரசியல்வாதி

கிரிஜா சுரேந்திரன் (Girija Surendran) (பிறப்பு 15 மே 1952) ஓர் இந்திய அரசியல்வாதியும், கேரள சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமாவார்.[1] அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினராகவும், இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் பாலக்காடு மாவட்டக் குழுவின் கேரள மாநிலக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.[1][2]

கிரிஜா சுரேந்திரன்
கேரள சட்டமன்றத்தின் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1996–2006
தொகுதிஸ்ரீகிருஷ்ணாபுரம் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 மே 1952 (1952-05-15) (அகவை 72)
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி
துணைவர்எஸ். சுரேந்திரன்
பிள்ளைகள்2

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

கிரிஜா, 15 மே 1952 அன்று கே. கிருஷ்ணன்-சி. ஆர். சாவித்ரி ஆகியோருக்கு பிறந்தார். கல்லூரியில் பட்டம் பெற்றார். எஸ். சுரேந்திரன் என்பவரை மணந்த இவர் மகள்கள்களுடன், கேரள மாநிலத்தில் பாலக்காடு நகரில் வசித்தார்.[1]

அரசியல் வாழ்க்கை

தொகு

1987 லில் நடந்த கேரள சட்டமன்றத் தேர்தலில், பாலக்காடு தொகுதியிலிருந்து கட்சியின் வேட்பாளராக போட்டியிட கிரிஜா சுரேந்திரனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பரிந்துரைத்தது. இவர் சுயேட்ச்சை வேட்பாளர் சி. எம். சுந்தரம் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக பதிவான 44.35% வாக்குகளுக்கு எதிராக கிரிஜா 37.41% வாக்குகளைப் பெற்றார்.[3] அடுத்தடுத்த, 1991லில் நடந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் இவர் வேட்புமனுக்கான பரிந்துரையைப் பெறவில்லை.[4] இருப்பினும், பின்னர் 1996ரில் நடந்த கேரள சட்டமன்றத் தேர்தலில், இவர் கட்சியால் இரண்டாவது முறையாகவும், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணபுரம் தொகுதியிலிருந்தும் இந்த முறை மீண்டும் பரிந்துரைக்கப்பட்டார்.[5]

இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் இரண்டு முறை பதவியில் இருந்த பி.பாலனுக்கு எதிராக, 48.78% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பாலனுக்கு ஆதரவாக 45.23% வாக்குகள் கிடைத்தது.[5][6] 2001 கேரள சட்டமன்றத் தேர்தலில், இவர் இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான, வி. எஸ். விஜயராகவனுக்கு எதிராக மீண்டும் பரிந்துரைக்கப்பட்டார்.[7][8] விஜயராகவனுக்கு ஆதரவாக பதிவான 47.25% வாக்குகளுக்கு எதிராக, தனக்கு ஆதரவாக பதிவான வாக்குகளில் 47.26% வாக்குகளைப் பெற்று, 21 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற வேட்பாளரானார்.[7][9] 2018 ஆம் ஆண்டில், கேரளாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநிலக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Members - Kerala Legislature - Girija Surendran". Niyamasabha.
  2. 2.0 2.1 "Kodiyeri re-elected CPI(M) State secretary" (in en-IN). தி இந்து. 2018-02-26. https://www.thehindu.com/news/national/kerala/kodiyeri-re-elected-cpim-state-secretary/article22854899.ece. 
  3. "Kerala 1987". இந்தியத் தேர்தல் ஆணையம்.
  4. "Kerala 1991". இந்தியத் தேர்தல் ஆணையம்.
  5. 5.0 5.1 "Kerala 1996". இந்தியத் தேர்தல் ஆணையம்.
  6. "Members - Kerala Legislature - P. Balan". Niyamasabha.
  7. 7.0 7.1 "10th Lok Sabha - Members Bioprofile - Vijayaraghavan, Shri V.S." மக்களவை (இந்தியா).
  8. "Kerala 2001". இந்தியத் தேர்தல் ஆணையம்.
  9. "Kerala 2001". இந்தியத் தேர்தல் ஆணையம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஜா_சுரேந்திரன்&oldid=3743817" இலிருந்து மீள்விக்கப்பட்டது