கிரிஜா ராகவன்

கிரிஜா ராகவன் (Girija Raghavan) என்பவர் தமிழ்நாட்டில் சென்னையைச் சேர்ந்த எழுத்தாளரும் பெண்ணியவாதியும் ஆவார். இவர் “லேடிஸ் ஸ்பெசல்” என்னும் பெண்கள் மாத இதழின் ஆசிரியர் ஆவார்.[1]

இளமையும் பணியும்

தொகு

கிரிஜா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 1954ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கல்லூரி படிப்பினை சென்னை வைஷ்ணவா கல்லூரியில் முடித்துள்ளார். பொதுத்துறை வங்கியில் 15 ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்.

சமூக சேவை

தொகு

வங்கி ஊழியராக பணி புரிந்த இவர் பெண்கள் குறித்து முன்னணி பத்திரிக்கைகளில் பல கட்டுரைகளையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துள்ளார்.[2] 1997ஆம் ஆண்டு முதல் இவர் “லேடீஸ் ஸ்பெஷல்” இதழின் ஆசிரியரகவும் உள்ளார்.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஜா_ராகவன்&oldid=3885495" இலிருந்து மீள்விக்கப்பட்டது