கிரில்லோயிடே
கிரில்லோயிடே புதைப்படிவ காலம்:டிராசிக் காலம் - முதல் | |
---|---|
அரக்னோசெபாலசு வெசுடிடசு (மோகோபிளிசிடிடே) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | என்சிபெரா
|
பெருங்குடும்பம்: | கிரில்லோயிடே
|
குடும்பம் | |
கிரில்லோயிடே (Grylloidea) என்பது பூச்சிகளின் மீப்பெரும் குடும்பமாகும். இது ஆர்த்தோப்டிரா வரிசையில், சிள்வண்டு என்று அழைக்கப்படுகிறது. இதில் "உண்மையான சிள்வண்டு", செதில் சிள்வண்டு, மரச் சிள்வண்டு மற்றும் பிற குடும்பங்களும் அடங்கும். இவற்றில் சில புதைபடிவங்களாக அறியப்படுகின்றன.
கிரில்லோயிடே டிராசிக் காலத்தைச் சேர்ந்தது. சுமார் 528 பேரினங்களின் கீழ் சுமார் 3,700 அறியப்பட்ட சிற்றினங்களையும், 43 அழிந்துபோன சிற்றினங்களையும் 27 அழிந்துபோனது பேரினங்களையும் கொண்டுள்ளது.[1]
சிறப்பியல்புகள்
தொகுகிரில்லோயிடே என்ற மீப்பெரும் குடும்பத்தில் உள்ள சிள்வண்டு மற்ற என்சிபெரான்களிலிருந்து வேறுபடுத்தும் அம்சங்களாக நீளமான, நூல் போன்ற உணர்கொம்பு, மூன்று கணுக்கால் பிரிவுகள், வயிற்றின் முனையில் மெல்லிய தொட்டுணரக்கூடிய மலவாய்க் கொம்பு மற்றும் இக்கொம்பில் குமிழி உணர்ச்சி முட்கள் ஆகும்.
சிள்வண்டு என்ற சொல் என்சிபெரா வரிசையில் உள்ள பூச்சிக்கும் பிரபலமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது எறும்பு சிள்வண்டு, புதர் சிள்வண்டு (டெட்டிகோனிடே) ஜெருசலேம் சிள்வண்டு (இசுடெனோபெல்மாட்டசு), பிள்ளைப்பூச்சி மற்றும் குகை சிள்வண்டுகள் (ராபிடோபோரிடே மற்றும் வேட்டா (அனோஸ்டோஸ்டோமாடிடே) இவற்றின் உறவினர்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பூச்சிகள் அனைத்தும் நான்கு கணுக்கால் பிரிவுகளைக் கொண்டுள்ளன. மேலும் இவை உண்மையான சிள்வண்டு, கிரில்லிடேவை விட ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாகத் தொடர்புடையவை.[1]
பெரும்பாலான கிரைலோய்டியன்களில் உடல் உருளை வடிவமாக இருக்கும். ஆனால் சிலவற்றில் இது முட்டைவடிவிலிருக்கும். கிரில்லோடல்பிடே (பிள்ளைப்பூச்சி) குடும்பத்தைத் தவிர, பிற பூச்சிகள் உணர்கொம்புகள் நீளமாகவும் நூல் போன்றதாகவும் இருக்கும். பிள்ளைப்பூச்சிகளில் இவை மிகவும் குறுகியதாகவும் தூரிகை போன்றதாகவும் இருக்கும். முதன்முதுகு இணைக்கப்படாத தட்டையான கீழ்த்தட்டுகளுடன் காணப்படும். மடிப்புகள் அல்லது முள்ளெலும்புகள் காணப்படாது. கணுக்கால் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. முன் காலின் உள் எலும்பு ஒலி கண்டறியும் செவிப்பறை உறுப்புகளைக் கொண்டுள்ளது. ஆண்களின் முன் சிறகு நரம்பு மண்டல உறுப்பைக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஓர் இறக்கை மற்றொரு இறக்கையினை தேய்க்கப்படும்போது ஒலி உருவாக்கும். வயிற்றின் முனையில் இரண்டு மலவாய் கொம்பு உள்ளன. கீழ் இன உறுப்புத் தட்டில் வெட்டு முள் இல்லை.[2]
வகைப்பாடு
தொகுபின்வரும் குடும்பங்கள் இந்த மீப்பெரும் குடும்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.[3]
- † பைசோக்ரில்லிடே கோரோச்சோவ், 1985
- கிரில்லிடே லைச்சார்ட்டிங், 1781
- ஓகாந்திடே பிளான்சார்ட், 1845-மரச் சிள்வண்டு
- மோகோப்லிசிடே ப்ரன்னர் வான் வாட்னெவில், 1873-செதில் சிள்வண்டு
- பலாங்கோப்சிடே பிளான்சார்ட், 1845-'சிலந்தி சிள்வண்டுகள்' மற்றும் உறவினர்கள்-பெரும்பாலும் தெற்கு அரைக்கோளம்
- † புரோட்டோகிரில்லிடே ஜூனர், 1937 (மேற்கு-மத்திய ஆசியா)
- ட்ரிகோனிடிடே சாசூர், 1874 (உலகளாவியப் பரவல்)
- துணைக்குடும்பம் நெமோபினே சாசூசர், 1877 (மரச் சிள்வண்டு உட்பட)
- துணைக்குடும்பம் டிரிகோனிடைனே சாசூர், 1874 ('வாள்-வால் சிள்வண்டு, திரிக்சு
- வகைப்பாட்டியலில் மாற்றப்பட்ட துணைக்குடும்பம்: டெரோப்லிசிடினே சோப்பர்டு, 1936 (வெப்பமண்டல ஆசியா)
நீக்கப்பட்ட குடும்பங்கள்
தொகுபின்வருபவை இப்போது கிரில்லோதால்போய்டியா என்ற தனி மீப்பெரும் குடும்பமாக வைக்கப்பட்டுள்ளன.[4]
- கிரில்லோடல்பிடே லீச், 1815-மோல் பிள்ளைப்பூச்சி
- மைர்மெகோபிலிடே சாசூர், 1874-எறும்பு பிள்ளைப்பூச்சி
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Vincent H. Resh; Ring T. Cardé (2009). Encyclopedia of Insects. Academic Press. p. 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-092090-0.
- ↑ Knud Th Holst (1986). The Saltatoria - Bush-Crickets, Crickets and Grass-Hoppers of Northern Europe. BRILL. pp. 50–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-07860-6.
- ↑ "Superfamily Grylloidea - Laicharting, 1781". Orthoptera Species File Online. பார்க்கப்பட்ட நாள் 26 September 2023.
- ↑ "superfamily Gryllotalpoidea Leach, 1815: Orthoptera Species File". orthoptera.speciesfile.org. பார்க்கப்பட்ட நாள் 2023-09-01.