கிரீசு கௌதம்
கிரீசு கௌதம் (Girish Gautam) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். 1953 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதி அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் இவர் பிறந்தார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் தியோடலாப் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி முதல் மத்தியப் பிரதேச சட்டமன்றத்தின் சபாநாயகராக பணியாற்றி வருகிறார்.[1]
கிரீசு கௌதம் Girish Gautam | |
---|---|
மத்தியப் பிரதேச சட்டமன்றம் சபா நாயகர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 பிப்ரவரி 2021 | |
முன்னையவர் | நர்மதா பிரசாத்து பிரஜாபதி |
சட்டமன்ற உறுப்பினர், மத்தியப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2008 | |
முன்னையவர் | பஞ்சுலால் பிரஜாபதி |
தொகுதி | தேவ்தாலாப்பு |
சட்டமன்ற உறுப்பினர், மத்தியப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் 2003–2008 | |
முன்னையவர் | சிறீனிவாசு திவாரி |
பின்னவர் | பன்னா பாய் பிரஜாபதி |
தொகுதி | மங்காவான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வார்ப்புரு:28.03.1953 ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
அரசியல் வாழ்க்கை
தொகு1993 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் கௌதம் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் சார்பாக மங்காவான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மத்திய பிரதேச சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகரான சிறீனிவாசு திவாரை எதிர்த்துப் போட்டியிட்டு இரண்டு முறையும் தோல்வியடைந்தார்.[2]
2003 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மங்காவான் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டுக் காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிட்ட சிறீனிவாசு திவாரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.[3]
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தியோதலாப் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு கௌதம் வெற்றி பெற்றார்.[4] அதனைத் தொடர்ந்து 2013[5] மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6]
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி முதல் மத்தியப் பிரதேச சட்டப்பேரவையின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு கிரீசு கௌதம் பணியாற்றி வருகிறார்.[7][8][9][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Girish Gautam(Bharatiya Janata Party(BJP)):Constituency- DEOTALAB(REWA) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
- ↑ "Mangawan Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
- ↑ "Girish Gautam winner in Mangawan, Madhya Pradesh Assembly Elections 2003". LatestLY (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
- ↑ "Girish Gautam winner in Deotalab, Madhya Pradesh Assembly Elections 2008". LatestLY (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
- ↑ "Girish Gautam winner in Deotalab, Madhya Pradesh Assembly Elections 2013". LatestLY (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
- ↑ "जानिये कौन हैं मध्यप्रदेश विधानसभा के नये स्पीकर गिरीश गौतम". Zee News Hindi (in இந்தி). 2021-02-21. பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
- ↑ PTI (2021-02-22). "BJP’s Girish Goutam unanimously elected Speaker of Madhya Pradesh Assembly" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/bjps-girish-goutam-unanimously-elected-speaker-of-madhya-pradesh-assembly/article33903754.ece.
- ↑ "What Girish Gautam's election as assembly speaker means for the BJP in MP". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
- ↑ Feb 23, TNN / Updated:; 2021; Ist, 08:06. "Madhya Pradesh: Switching left to right, Girish Gautam made Deotalab BJP citadel | Bhopal News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "गिरीश गौतम निर्विरोध बने मध्यप्रदेश विधानसभा के नये अध्यक्ष". Navbharat Times (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.