கிரீமெர்சைட்டு
ஆலைடு கனிமம்
கிரீமெர்சைட்டு (Kremersite) என்பது (NH4,K)2FeCl5•H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இரும்பு, பொட்டாசியம், அமோனியம் போன்றவற்றின் நீரேறிய பல்குளோரைடாக அரிதாக இக்கனிமம் தோன்றுகிறது. நீரில் கரையும் பண்புடன் செம்பழுப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களில் செஞ்சாய்சதுரப் படிகங்களாக கிரீமெர்சைட்டு படிகமாகிறது. இத்தாலி நாட்டின் விசுவியசு மலை, சிசிலித் தீவின் எட்னா எரிமலை [ன்ற எரிமலைகளின் ஆவித்திறப்புகளில் இக்கனிமம் கிடைக்கிறது. 1853 ஆம் ஆண்டு முதன்முதலில் கண்டறியப்பட்டது. 1827 ஆம் ஆண்டில் பிறந்த செருமனிய வேதியியலாளர் பீட்டர் கிரீமெர் கண்டுபிடித்த காரணத்தால் அவர் பெயர் கனிமத்திற்கு சூட்டப்பட்டது.