கிருட்டிணகிரி பாறை ஓவியங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாறை ஓவியங்கள்

கிருட்டிணகிரி பாறை ஓவியங்கள் என்பவை தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில், கிருட்டிணகிரி நகரின் அடையாளமாக உள்ள செயத்பாசா மலையில் இயற்கையாக அமைந்த குகை ஓன்றில் கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஓவியங்கள் ஆகும்.[1] இந்த ஓவியங்களில் ஆயுதங்களுடன் கூடிய மனித உருவங்களும், பறவைகளின் ஓவியங்களும் உள்ளன. மேலும் மரம், செடி, கொடி வகைகளும் சிமிழ் போன்ற முத்திரை அல்லது குறியீட்டு வடிவங்களும் காணப்படுகின்றன

முதல் தொகுப்பில் ஆயுதங்கள் ஏந்திய இரு மனித உருவங்கள் கோட்டோவியங்களாக சிறிய அளவில் வரையப்பட்டுள்ளன. அடுத்து நான்கு பறவைகளின் உருவங்கள் காணப்படுகின்றன. இரண்டாவது தொகுப்பில் ஐந்து மனித வடிவங்கள் தங்கள் கைகளை கோர்த்தியபடி நாட்டியம் ஆடுவது போல் சிறியதாக வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியத்தைச் சுற்றி மரம், செடி, கொடி, சிமிழ் குறியீடு போன்றவை சிறிய அளவில் வரையப்பட்டுள்ளன.[1]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 த. பார்திபன், தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி-II சங்க காலம். ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறகட்டளை, தருமபுரி. 2010 ஏப்ரல். p. 171. {{cite book}}: Check date values in: |year= (help)