கிருன்னிசா ஏ.
கிருன்னிசா ஏ. (Khyrunnisa A.) இந்திய சிறுவர் புனைகதை இலக்கிய எழுத்தாளர், பேச்சாளர், கல்வியாளர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். பட்டர்ஃபிங்கர்ஸ்' என்ற வரைகதை கதாப் பாத்திரத்தை உருவாக்கியவர். [1] இந்த பாத்திரம் முதலில் இந்திய குழந்தைகள் இதழான டிங்கிளில் வெளிவந்தது
கிருன்னிசா ஏ. | |
---|---|
கிருன்னிசா ஏ. | |
தேசியம் | இந்தியன் |
கல்வி | கேரளப் பல்கலைக்கழகம் |
வகை | சிறுவர் இலக்கியம் |
பெரியவர்களுக்கான இவரது முதல் புத்தகம் 31 ஜூலை 2019 அன்று வெளிவந்தது. டன்க் இன் சீக்:தெ ஃபன்னி சைட் ஆஃப் லைஃப் என்ற தலைப்பில், நவீன நகர்ப்புற பெண்ணின் அனுபவங்களை நகைச்சுவையாக எடுத்துக் காட்டும்ம் இந்தப் புத்தகம் வெஸ்ட்லேண்ட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.[2]
ஸ்காலஸ்டிக் பதிப்பகம் வெளியிட்ட தி லிசார்ட் ஆஃப் ஓஸ் மற்றும் பிற கதைகள் என்ற தலைப்பில் இளம் வாசகர்களுக்கான விலங்குக் கதைகள் புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளிவந்தன.[3]
பிப்ரவரி 2021 இல், பேபி மற்றும் டப்டப் நூல் வெளியானது. இது ஒரு பையன், ஒரு நாய் மற்றும் ஒரு குழந்தைக்கு இடையிலான உறவைப் பற்றிய ஒரு வேடிக்கையான புதினம் ஆகும். [4]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகிருன்னிசாவின் பெற்றோர்களான ஏ.ஆர். பிஜ்லி மற்றும் ஆயிஷா பிஜ்லி ஆகியோர் திருவனந்தபுரத்தில் குடியேறினர்.
கல்வி
தொகுகிருன்னிசா தனது பள்ளிப் படிப்பை ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட் திருவனந்தபுரத்திலும், ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியில் இளங்கலையும் திருவனந்தபுரம் , கேரள பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் எம் பில் பட்டங்களைப் பயின்றார்.கேரள பல்கலைக் கழக அளவில் ஆங்கில இளங்கலைப் பட்டத்தில் மூன்றாவது இடம் பிடித்தார். [5]
நூலியல்
தொகுகுழந்தைகள் புத்தகங்கள்
தொகுபட்டாம்பூச்சிகள்
தொகு- அஃப்கோர்ஸ் இட்ஸ் பட்டர்ஃபிங்கர்ஸ்! (2018)
- ரன், இட்ச் பட்டர்பிங்கர்ஸ் அகைன் ! (2017)
- தெ மிஸ் அட்வன்சர்ஸ் அகைன் (2016)
- கிளீன் பவுல்ட் , பட்டர் பின்கர்ஸ்!(2015)
- கோல், பட்டர்ஃபிங்கர்ஸ்! (2012)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Khyrunnisa A – Penguin India" (in en-US). Penguin India இம் மூலத்தில் இருந்து 2017-07-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170728182613/https://penguin.co.in/author/a-khyrunnisa/.
- ↑ Nagarajan, Saraswathy (2019-07-26). "Author Khyrunnisa A has two different books ready for release" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/books/books-authors/author-khyrunnisa-a-ready-with-two-different-books/article28721733.ece.
- ↑ Nagarajan, Saraswathy (2019-07-26). "Author Khyrunnisa A has two different books ready for release" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/books/books-authors/author-khyrunnisa-a-ready-with-two-different-books/article28721733.ece.
- ↑ "Baby and Dubdub seaking tiger - Google Search". www.google.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-24.
- ↑ "LITERATURE: Author Profile – Khyrunnisa A – Trivandrum News". www.yentha.com (in ஆங்கிலம்). Archived from the original on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ வலைத்தளம்
- பெங்குயின் இந்தியாவில் கிருன்னிசா ஏ