கிருஷ்ணாபுரம் ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயில்

கிருஷ்ணாபுரம் ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயில் என்பது திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும். [1] இக்கோயிலில் ஆஞ்சநேயர் அபயஹஸ்தராக தெற்கு நோக்கி அமைந்துள்ளார்.

இக்கோயிலில் தலவிருட்சமாக நெல்லிமரமும், தீர்த்தமாக அனுமம் தீர்த்தமும் உள்ளது.

இத்தலத்தில் ராமர் யாகம் செய்தமையால் பல இடங்களில் வெண் சாம்பல் கிடைக்கிறது. அதனை ராமனின் பிரசாதமாக எண்ணுகின்றனர் பக்தர்கள்.

தலவரலாறு

தொகு

இத்தலத்தில் தேவலோகத்தினைச் சேர்ந்த மயன் என்பவர் அழகிய ஊரினை அமைத்து, அதில் ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்தார். அதனால் பிரம்மாவிடம் வரம் பெற்று ஹேமை என்ற தெய்வப்பெண்ணுடன் வாழ்ந்துவந்தார். நாரத முனிவர் மயன் ஹேமையுடன் இருப்பதைக் கூறினார். அதனால் கோபம் கொண்ட இந்திரன் மயனை கொன்றுவிட்டார். இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோசம் உண்டானது. அதனை தீர்க்க சிவபெருமானை நினைத்து தவமிருந்தார். பிரம்மஹத்தி தோசம் போக்க சிவபெருமான் கங்கையை இத்தலத்தில் உள்ள குகையில் வரும் படி செய்தார். இதில் குளித்து இந்திரன் சாபவிமோசனம் பெற்றார். இந்த குளத்தினை காப்பதற்கு சுயம்பிரபை எனும் தேவலோகப் பெண்ணை காவலுக்கு வைத்தார். அவரிடம் இங்கு அனுமன் வந்து தங்கும்போது அவரிடம் ஒப்படைத்துவிட்டு தேவலோகம் வருமாறு கூறினார்.

தவத்தில் இருந்த சுயம்பிரபையை, சீதையைக் காண சென்ற அனுமன் கண்டார். கங்கையில் தாகம் தீர்த்துக் கொண்டு இந்த வரலாற்றை அறிந்து இராமர் பட்டாபிசேகம் முடிந்த பின்பு இத்தலத்தில் வந்து தங்கினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Jaya veera anjenayar Temple : Jaya veera anjenayar Jaya veera anjenayar Temple Details - Jaya veera anjenayar- Krishnapuram - Tamilnadu Temple - ஜெயவீர ஆஞ்சநேயர்".