கிருஷ்ணா கௌர்
கிருஷ்ணா கௌர் (Krishna Gaur) ஓர் இந்திய அரசியல்வாதியும், தொழிலதிபரும், சமூக சேவகருமாவார்.[1] இவர் 2018இல் நடந்த மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக கோவிந்த்புராத் தொகுதியிலிருந்து மத்தியப் பிரதேச சட்டமன்றதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் தனது நெருங்கிய போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரசின் கிரிஷ் சர்மாவை 46,359 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[2] போபாலிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணான இவர், போபாலின் நகரத் தந்தையாகவும்,[3] 2005இல் மத்திய பிரதேச மாநில சுற்றுலா கழகத்தின் தலைவராகவும் இருந்தார்.[4]
கிருஷ்ணா கௌர் | |
---|---|
மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 | |
முன்னையவர் | பாபுலால் கௌர் |
தொகுதி | கோவிந்தபுரா சட்டமனறத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1967/1968 (அகவை 56–57)[1] |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | புருசோத்தம் கௌர் (இறப்பு 2004) |
உறவினர் | பாபுலால் கௌர் (மாமனார்) |
வாழிடம்(s) | சுவாமி தயானந்தா நகர், போபால், மத்தியப் பிரதேசம், இந்தியா |
வேலை | வர்த்தகம் |
அறியப்படுவது | சமூகப் பணி |
இணையத்தளம் | krishnagaur |
அரசியல் வாழ்க்கை
தொகுதனது மாமனார் பாபுலால் கௌருக்குப் பிறகு 2018 ஆம் ஆண்டில், மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் கோவிந்த்புரா தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் கிரீஷ் சர்மாவை 46,359 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3][5]
சொந்த வாழ்க்கை வாழ்க்கை
தொகுகௌர் மூத்த அரசியல்வாதியான பாபுலால் கௌரின் மகன் புருஷோத்தம் கௌர் என்பவரை மணந்தார். புருஷோத்தம் கௌர் 2004இல் இறந்தார்.[1][6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Krishna Gaur(Bharatiya Janata Party(BJP)):Constituency- GOVINDPURA(BHOPAL) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 26 August 2019.
- ↑ Singh, Ramendra (13 December 2018). "Krishna Gaur wants bigger share for women in Indian politics" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/bhopal/krishna-gaur-wants-bigger-share-for-women-in-indian-politics/articleshow/67067767.cms.
- ↑ 3.0 3.1 Noronha, Rahul (21 August 2019). "Babulal Gaur: Man who could never believe he was king" (in en). India Today. https://www.indiatoday.in/india/story/babulal-gaur-man-who-could-never-believe-he-was-king-1590058-2019-08-21.
- ↑ "Madhya Pradesh poll: Krishna Gaur- Can she emulate the heroics of her father-in-law Babulal Gaur?" (in en). Times Now. 22 November 2018. https://www.timesnownews.com/elections/article/madhya-pradesh-poll-krishna-gaur-the-key-candidates-of-assembly-elections-2018-can-krishna-gaur-emulate-the-heroics-of-her-father-in-law-former-chief/317965.
- ↑ "Bhopal's First Woman MLA Krishna Gaur Elected From Govindpura" (in en). NewsClick. 12 December 2018. https://www.newsclick.in/bhopals-first-woman-mla-krishna-gaur-elected-govindpura.
- ↑ "A chapter ends in MP politics as Babulal Gaur takes final bow". uniindia.com. 21 August 2019. http://www.uniindia.com/a-chapter-ends-in-mp-politics-as-babulal-gaur-takes-final-bow/north/news/1704894.html.
- ↑ "Former Madhya Pradesh chief minister Babulal Gaur passes away" (in en). Hindustan Times. 21 August 2019. https://www.hindustantimes.com/india-news/former-madhya-pradesh-chief-minister-babulal-gaur-passes-away/story-4Uis611UJMmLJJ3JH7DUIK.html.