பாபுலால் கௌர்

இந்திய அரசியல்வாதி

பாபுலால் கௌர் (Babulal Gaur, 2 சூன் 1930 – 21 ஆகத்து 2019) பாரதிய ஜனதா கட்சியின் இந்திய அரசியல்வாதியாவர்.போபாலில் அமைந்த கோவிந்தபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பத்து முறை மத்தியப் பிரதேச சட்ட மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரத்தாப்புகர் மாவட்டம், நௌகிரி எனும் ஊரில் 2 சூன் 1930-இல் பிறந்த பாபுலால் கௌர், போபாலில் இளங்கலை சட்டப் படிப்பு பயின்றவர். ஜனதா கட்சியின் ஆதரவில் போபால் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை உறுப்பினராக போட்டியிட்டு வென்றவர்.

பாபுலால் கௌர்
பாபுலால் கௌர், முன்னாள் முதலமைச்சர், மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தின் 17வது முதலமைச்சர்
பதவியில்
23 ஆகஸ்டு 2004 – 29 நவம்பர் 2005
முன்னையவர்உமா பாரதி
பின்னவர்சிவ்ராஜ் சிங் சௌஃகான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பாபுலால் கௌர் யாதவ்

(1930-06-02)2 சூன் 1930
நௌகிரி, பிரத்தாப்புகர் மாவட்டம், உத்தரப்பிரதேசம்
இறப்பு21 ஆகத்து 2019(2019-08-21) (அகவை 90)
போபால், மத்தியப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
துணைவர்பிரேம் தேவி கௌர்
பிள்ளைகள்1 மகன், 2 மகள்கள்
வேலைஅரசியல்
அறியப்படுவதுஅரசியல்வாதி, சமூக ஆர்வலர், ஊக்கமூட்டும் தலைவர்

பாபுலால் கௌர் 4 செப்டம்பர் 2002 முதல் 7 டிசம்பர் 2003 முடிய மத்தியப் பிரதேச சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக பதவியில் இருந்தவர். பாபுலால் கௌர் 1946 முதல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர். 1956 முதல் பாரதிய ஜனசங்க கட்சியின் செயலராகப் பணியாற்றியவர். ஜனசங்க கட்சியின் தொழிலாளர் பிரிவான ராஷ்டிரிய மஸ்தூர் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் பாபுலால் கௌரும் ஒருவராவார்.

இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலை காலத்தில் பாபுலால் கௌர் மிசா சட்டத்தில் கைதாகி 19 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர். பாபுலால் கௌர் 1977-ஆம் ஆண்டு முதல் 2003-ஆம் ஆண்டு முடிய போபாலின் கோவிந்தபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தொடர்ந்து ஏழு முறை மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

1999 - 2003 முடிய மத்தியப் பிரதேசத்தின் 11வது சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவராகத் தலைவராக செயல்பட்டவர். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். 8 டிசம்பர் 2003 முதல் மத்தியப் பிரதேச மாநிலத்தின் நகர வளர்ச்சித் துறை, சட்டத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். 23 ஆகஸ்டு 2004 முதல் 29 நவம்பர் 2005 முடிய மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சராக பதவி வகித்தவர்.

கோவிந்தபுரா சட்டமன்றத் தொகுதியிலிருந்து மீண்டும் மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாபுலால் கௌர், சிவ்ராஜ் சிங் சௌஃகான் அமைச்சரவையில் 21 டிசம்பர் 2013 அன்று மூத்த அமைச்சராக பதவியேற்றார்.[1]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Life Sketch - Department of Public Relations, Madhya Pradesh". Department of Public Relation Madhya Pradesh. Archived from the original on 2016-04-01. பார்க்கப்பட்ட நாள் 2015-12-21.

வெளி இணைப்புகள்

தொகு

Dept. of Public Relations - Life Sketch பரணிடப்பட்டது 2016-04-01 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபுலால்_கௌர்&oldid=4058440" இலிருந்து மீள்விக்கப்பட்டது