பிரத்தாப்புகர் மாவட்டம், உத்தரப்பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

பிரத்தாப்புகர் மாவட்டம் (இந்தி: प्रतापगढ़ ज़िला, உருது: پرتاپ گڑھ ضلع‎) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைநகரம் பிரத்தாப்புகர் நகரம் ஆகும். பிரத்தாப்புகர் அலகாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. பிரத்தாப்புகர் சுல்தான்பூரிலிருந்து 39 கிமீ தொலைவிலும், அலகாபாத்திலிருந்து 61 கிமீ தொலைவிலும் அலகாபாத்-பைசாபாத் இடையேயான முதன்மை சாலையில் அமைந்துள்ளது. இது உத்தரப்பிரதேசத்தின் மிகப் பழைமையான மாவட்டங்களுள் ஒன்று. இது 1858 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 137 மீ உயரத்திலுள்ளது.

பிரத்தாப்புகர் (பெல்கா) மாவட்டம்
प्रतापगढ़ ज़िला
پرتاپ گڑھ ضلع
பிரத்தாப்புகர் (பெல்கா)மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்அலகாபாத்
தலைமையகம்பிரத்தாப்புகர், உத்தரப்பிரதேசம்
பரப்பு3,717 km2 (1,435 sq mi)
மக்கட்தொகை3,173,752 (2011)
வட்டங்கள்ராணிகஞ், kunda, Lalganj,Patti, Sadar
மக்களவைத்தொகுதிகள்பிரத்தாப்புகர்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைRaniganj, Kunda, Vishwanathganj, Sadar, Rampur
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ-96, தே.நெ-236
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பொருளாதாரம்

தொகு

2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பிரத்தாப்புகர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி பிரத்தாப்புகர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,173,752.[2] இது தோராயமாக மங்கோலியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 109வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 854 inhabitants per square kilometre (2,210/sq mi).[2] மேலும் பிரத்தாப்புகர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 16.2%.[2] பிரத்தாப்புகர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 994 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் பிரத்தாப்புகர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 73.1%.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.