கிருஷ்ணா தாஸ்குப்தா
கிருஷ்ணா தாஸ்குப்தா (Krishna Dasgupta) (கிருஷ்ணா கங்குலி) (29 திசம்பர் 1937 - 2013) இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வங்காளப் பாரம்பரிய பாடகராகவும், இசை ஆசிரியராகவும் இருந்தார். 1950கள், 60கள் மற்றும் 70களில் இவர் வங்காள மொழித் திரைப்படங்களிலும், திரைப்படம் அல்லாதவற்றிலும் ஏராளமான பாடல்களைப் பாடினார். [1] மேற்கு வங்காளத்தில் அனைத்திந்திய வானொலியில் 1931 முதல் ஒளிபரப்பப்பட்ட பிரபலமான ஆரம்பகால வங்காள சிறப்பு விடியல் வானொலி நிகழ்ச்சியான "மகிசாசுரமர்தினி"யில் குரல் வழங்கியதற்காக இவர் பரவலாக அறியப்படுகிறார். [2]
கிருஷ்ணா தாஸ்குப்தா | |
---|---|
இயற்பெயர் | கிருஷ்ணா கங்குலி |
பிறப்பு | ஜனாய், ஹூக்ளி, மேற்கு வங்காளம், இந்தியா | 29 திசம்பர் 1937
இறப்பு | 2013 (அகவை 75–76) |
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகர் |
தொழில்(கள்) | பாடுதல் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகிருஷ்ணா தாஸ்குப்தா மேற்கு வங்காளத்தின் ஹூக்லி மாவட்டத்தில் ஜனாய் என்ற ஊரில்1937 திசம்பர் 29 அன்று பிறந்தார். இவர் புகழ்பெற்ற இந்தியப் பாரம்பரிய பாடகர்களான ஆச்சார்ய தாராபாத சக்ரவர்த்தி மற்றும் உஸ்தாத் அமீர் கான் ஆகியோரின் குறிப்பிடத்தக்க சீடராக இருந்தார். [3]
தொழில்
தொகுஇவர், ஒரு திறமையான பல்துறை பாடகர். குறிப்பாக கியால், தும்ரி, பஜனைகள் மற்றும் பெங்காலி நவீன பாடல்களுக்கு பெயர் பெற்றவர். இவர் ஒரு சிறப்பு பாணியிலான செயல்திறனைக் கொண்டிருந்தார். அது இவரது பாடல்களை தனித்துவமாக்கியது. பண்டிட் ஞான பிரகாஷ் கோஷ் இசையமைத்த "அசமப்தா" (1956), "ஏக்தாரா" (1957), "இராஜலட்சுமி ஓ சிறீகாந்தா" (1958),[4] "பிரந்தி", "நாதெர் நிமாய்" (1960) மற்றும் "பிபாஷா" (1962) போன்ற படங்களிலும், பாசு பட்டாச்சார்யா இயக்கிய இந்தி திரைப்படமான "தும்ஹாரா கல்லூ" (1975) படத்திலும் பாடியுள்ளார். இவர் பல்வேறு இசை மாநாடுகளிலும் தனது நிக்ழச்சிகளை நிகழ்த்தியிருந்தார். [1][3]
மேற்கு வங்காளத்தில் அனைத்திந்திய வானொலியில் 1931 முதல் ஒளிபரப்பப்பட்ட பிரபலமான ஆரம்பகால வங்காள சிறப்பு விடியல் வானொலி நிகழ்ச்சியான மகிசாசுரமத்தினியில் குரல் வழங்கியதற்காக இவர் இன்றும் பரவலாக அறியப்படுகிறார். நிகழ்ச்சியில், இவர் அகிலோ பிமனே தபோ ஜெயகானே என்றப் பாடலைப் பாடினார். [5][6]
இறப்பு மற்றும் மரபு
தொகுகிருஷ்ணா தாஸ்குப்தா 2013 இல் கொல்கத்தாவில் காலமானார்.
இவரது மாணவர்களில் ஒருவரான புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் இராமானந்தா சென்குப்தாவின் மகள் நந்தினி சக்ரவர்த்தி இவரது வாழ்க்கை குறித்த ஹரானோ சுர் என்ற ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Harano Sur is a tribute to my guru, Krishna Ganguly Dasgupta". https://timesofindia.indiatimes.com/entertainment/bengali/music/harano-sur-is-a-tribute-to-my-guru-krishna-ganguly-dasgupta/articleshow/72305585.cms. பார்த்த நாள்: 2020-09-17.
- ↑ "Mahalaya Know the brains behind Mahishasuramardini recital — a timeless classic". https://www.thestatesman.com/india/mahalaya-2018-know-brains-behind-timeless-classic-composition-mahishasuramardini-1502694063.html. பார்த்த நாள்: 2020-09-20.
- ↑ 3.0 3.1 "Esha Bandyopadhyay Biography". http://www.eshavocal.com/about.php.
- ↑ "Youtube - Film: Rajlakhsmi & Srikanta--Aaji E Shrabone Eso Phire--Krishna Gangopadhyay (Dasgupta) (1958)". https://www.youtube.com/watch?v=KXI8J38Ghhw.
- ↑ "Youtube - Akhilo Bimane Tabo Jayoi Gane by Krishna Dasgupta". https://www.youtube.com/watch?v=8wK3bUb-tyw.
- ↑ "Youtube - Akhilo Bimane Tabo Jayoi Gane Cover by Chandrima Banerjee Sarkar". https://www.youtube.com/watch?v=gXKQjhaXLhY.